''முதல்ல அழகிரியை கவனியுங்க... சசிகலா பற்றி அப்புறம் பேசலாம்''... மு.க.ஸ்டாலினை சாடிய இல.கணேசன்!
தூத்துக்குடி: சசிகலா வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
'சசிகலா வந்துவிட்டார் இனிமேல் நடக்க வேண்டியது நடக்கும்'' என்று கூறுவது ஒரு பக்குவம் உள்ள அரசியல் தலைவருக்கு பொருந்தாது என்று மு.க.ஸ்டாலினையும் இல.கணேசன் தாக்கினர்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளை சந்திக்கும் கூட்டம் இன்று நடந்தது. இதில் பா.ஜ.க மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:- சசிகலா தற்போதுதான் சிறையில் இருந்து வந்துள்ளார். இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று சிலர் கேட்கின்றனர். இது அதிமுக மட்டுமே கவலைப்பட வேண்டிய விஷயம்.
ஒரு கட்சி தன்னுடைய ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் ஒன்று திரட்டலாம். அது தான் நடந்துள்ளது. அதனாலே ஒட்டுமொத்த தமிழகமும் சசிகலாவை வரவேற்கிறது என்று குறிப்பிட முடியாது. நான் குறைவாகவும் சொல்லவில்லை. விமர்சனமும் செய்யவில்லை. சசிகலா வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.
அழகிரி திமுகவிற்கு எதிராக போட்டி போட்டு செயல்படுகிறார். என்வே அதை பற்றிதான் ஸ்டாலின் கவலைப்பட வேண்டுமே தவிர ''சசிகலா வந்துவிட்டார் இனிமேல் நடக்க வேண்டியது நடக்கும்'' என்று கூறுவது ஒரு பக்குவம் உள்ள அரசியல் தலைவருக்கு பொருந்தாது என்று இல.கணேசன் தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications