Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறுவேடத்தில் மணப்பெண்.. ஆசையாக இல்லறம் தொடங்கிய தூத்துக்குடி பழ வியாபாரி.. 2 நாளில் மாறிய வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தங்க நகைகள், நிலம், கட்டுக்கட்டாக பணம் போன்றவற்றுக்காக ஆசைப்பட்டு, இளம்பெண்களிடம் நெருங்கி பழகி மோசடி செய்யும் நபர்கள் பெருகி கொண்டிருக்கிறார்கள்.. இந்த மோசடியை எளிதாகவும் , சந்தேகம் வராதபடி செய்வதற்காகவும், இதுபோன்ற மோசடிக்காரர்கள் தேர்ந்தெடுப்பது மோட்ரிமோனியல் மற்றும் புரோக்கர்களைதான்.. இந்த திருமண மோசடிகளுக்கு ஆண், பெண் இரு தரப்பினருமே விலக்கு இல்லை... இதோ இப்போதும் ஒரு அதிர்ச்சி சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர்.. இவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பழம் வியாபாரம் செய்து வருகிறார்

Thoothukudi Bride Fruit Vendor

பாஸ்கருக்கு 35 வயதாகிறது.. இன்னும் திருமணம் நடக்கவில்லை.. எங்கெங்கோ முயற்சி செய்தும் அவருக்கு பெண் கிடைக்கவில்லை.. இறுதியில் சாத்தான்குளத்தை சேர்ந்த திருமண புரோக்கர் மூக்காண்டியை அணுகினார்..

தூத்துக்குடி பழ வியாபாரி

தனக்கு பெண் தேடி தரும்படியும், ஆதரவற்ற பெண்ணாக இருந்தாலும்கூட பரவாயில்லை என்றும் சொல்லி உள்ளார்.. உடனே மூக்காண்டியும் நாகர்கோவிலை சேர்ந்த மற்றொரு திருமண பெண் புரோக்கர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் போட்டோவை காட்டி உள்ளனர்.. அந்த பெண் ஆதரவற்றவர் என்றும் 2 புரோக்கர்களும் கூறி உள்ளனர்..

இளம்பெண்ணை போட்டோவில் பார்த்ததுமே பாஸ்கருக்கு பிடித்துப்போய்விட்டது.. உடனே திருமணத்துக்கு சம்மதித்தார்.. 2 புரோக்கர்களும் தங்களுக்கு சேரவேண்டிய ரூ.40 ஆயிரம் கமிஷன் வாங்கி கொண்டனர்.. ஆதரவற்ற பெண் என்று புரோக்கர்கள் சொன்னதால், அந்த பெண்ணிற்கு திருமணத்துக்கு தேவையான சேலை, சுடிதார் என ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கி தந்துள்ளார் பாஸ்கர். மேலும், 4 கிராம் தங்கத்தில் தாலியும் வாங்கி உள்ளார்..

போட்டோவில் மணப்பெண்

கடந்த 20ம் தேதி, திருச்செந்தூர் சிவன்கோயில் பின்புறத்துள்ள துர்க்கை அம்மன் கோயிலில் பாஸ்கர், அந்த பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு பாஸ்கர் தனது வீட்டிற்கு அந்த இளம்பெண்ணை அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் வீட்டில் 2 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்..

3வது நாள் அதாவது 22ம் தேதி, பாஸ்கரிடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும்படி புது மனைவி சொல்லி உள்ளார்.. உடனே பாஸ்கரும் கடைக்கு சென்று அனைத்து பொருட்களையும் வாங்கி வந்துள்ளார்-. ஆனால் வீட்டில் மனைவியை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.. அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தும் எந்த பதிலும் இல்லை..


4 கிராம் தங்கம் தாலி, பட்டுப்புடவை

பிறகு, வீட்டில் வைத்திருந்த ரூ.10,000 ரொக்கம், புதிய நகைகள் மற்றும் சமீபத்தில் திருமணத்துக்கு வாங்கிய பட்டுப்புடவை, துணிகள் அனைத்தும் காணாமல் போனதை கவனித்தார்... அதுமட்டுமல்ல, திருமணக்கோலத்தில் எடுத்திருந்த போட்டோக்கள், வீடியோக்கள் செல்போனில் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. .

உடனே புரோக்கர் மூக்காண்டியை தொடர்பு கொண்டார். ஆனால் பெண்ணைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அப்போதுதான் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்த பாஸ்கர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான இளம்பெண் மற்றும் அவருடன் தொடர்புடைய திருமண புரோக்கர் குறித்து தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..!!

35 வயதுக்கு மேல் திருமணமாகாத ஆண்களை குறிவைத்து இப்படி பல மோசடிகளை இவர்கள் செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.. 2 புரோக்கர்கள், இளம்பெண் யார் என்று தெரியவில்லை.. மணப்பெண் போல மாறுவேடம் போட்டு ஏமாற்றிய இளம் பெண்ணுக்கும் 2 புரோக்கர்களுக்கும் வலை வீசப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+