குடும்ப கட்டுப்பாட்டிற்கு பிறகும் கர்ப்பம்.. "எப்புட்றா.." ஷாக்கான பெண்.. சென்னை ஐகோர்ட் அதிரடி
தூத்துக்குடி: குடும்பக் கட்டுப்பாடு செய்த இளம்பெண்ணுக்கு மீண்டும் குழந்தை பிறந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை உயர்வதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. "நாமிருவர் நமக்கு இருவர்" உட்பட பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதேபோல குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டே வருகிறது. நாடு முழுக்க இருக்கும் அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன்களும் செய்யப்பட்டே வருகிறது.

தூத்துக்குடி: இதனிடையே தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகும் குழந்தை பிறந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், கோர்ட் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாசுகி. இவரது கணவர் அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் இருந்த நிலையில், இவர்கள் 2013ஆம் ஆண்டில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொண்டனர்.
வாசுகிக்குத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் Tubectomy என்ற குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கர்ப்பமடைய வாய்ப்பு இல்லை என்று அவர் நினைத்துள்ளார். இந்தச் சூழலில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முடிந்த அடுத்த ஆண்டே அதாவது 2014இல் வாசுகி மீண்டும் கருத்தரித்துள்ளார். அதைத் தொடர்ந்து 2015 ஜனவரி மாதம் இவருக்குக் குழந்தையும் பிறந்துள்ளது.
அதிர்ச்சி: குடும்பக் கட்டுப்பாடு செய்த பிறகும் குழந்தை பிறந்ததால் வாசுகி அதிர்ச்சியடைந்தார். மருத்துவர் அலட்சியமாகச் சிகிச்சை அளித்தாலேயே தான் கருத்தரித்ததாக சொல்லி அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இதில் இப்போது, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிபதி புகழேந்தி, "நாடு முழுக்க இருக்கும் மருத்துவமனைகள் சுகாதார மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் குடும்பக் கட்டுப்பாடு என்பது ஒரு தேசியத் திட்டமாகும். அதை மத்திய மாநில அரசுகள் தான் நேரடியாகச் செயல்படுத்துகிறது. அதன் பொறுப்பு அவர்களிடம் தான் இருக்கிறது. அதிகாரிகள் இதைச் செயல்படுத்தும் போது, முறையாகக் கருத்தடை செய்யாமல் அலட்சியம் காட்டுவதால், இந்தத் திட்டத்தின் நோக்கமே நாசமாகிறது.
உத்தரவு: பலரும் தானாகவே முன்வந்து கருத்தடை செய்கிறார்கள். அப்படிச் செய்யும் நபர்கள் மீண்டும் கருவுறுதல் மற்றும் கூடுதல் குழந்தைகள் இருக்கக்கூடாது என்றே எதிர்பார்க்கிறார்கள். இப்போது வழகுக்கு தொடர்ந்து மனுதாரரும் இதே போலத் தானாகவே முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துள்ளார். மருத்துவரின் முறையற்ற செயல்திறன் காரணமாகத் தவறு நடந்துள்ளது.
இதனால் அவர் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்த வழக்கில் சிகிச்சை அளித்த மருத்துவரின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவைப் புறந்தள்ளிவிட முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடாகத் தர வேண்டும். மேலும், அந்த பெண்ணின் மூன்றாவது குழந்தை அரசு அல்லது தனியார்ப் பள்ளியில் இலவசமாகக் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த குழந்தை புத்தகங்கள், சீருடைகள் எனக் கல்விக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும். அந்த குழந்தை பட்டப்படிப்பை முடிக்கும் வரை அல்லது 21 வயதாகும் வரை உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் 10 ஆயிரம் விகிதம் ஆண்டுக்கு 1.20 லட்சத்தை அரசு செலுத்த வேண்டும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications