Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழக மீனவர்கள் மீது இலங்கை அறிவிக்கப்படாத போரை நடத்துகிறது.." மோடி அரசை சரமாரியாக தாக்கிய ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின், மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை அறிவிக்கப்படாத போரை நடத்தி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

CM Stalin targets Modi says Sri Lanka is waging an undeclared war on Tamil Nadu fishermen

ஸ்டாலின் பிரச்சாரம்: இதற்கிடையே தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்த முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் முதலில் எடப்பாடி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை நினைவுகூர்ந்த அவர், எடப்பாடி பழனிசாமி அப்போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் தான் பார்த்துத் தெரிந்து கொண்டேன் என்று பச்சையாகப் பொய் சொன்னதாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழக மீனவர்கள் நலனைக் காக்கத் தவறிய அரசாக மோடி அரசு இருக்கிறது.. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது.. கைது, அபராதம், படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் மீனவர்கள் மீது இலங்கை அரசு அறிவிக்கப்படாத போரைத் தான் நடத்துகிறது. இதைத் தடுக்க மத்திய அரசால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

விஸ்வகுருவா அல்லது மவுன குருவா: மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கும் பிரதமர் மோடியைப் பார்த்து பொதுமக்கள் நீங்கள் விஸ்வகுருவா அல்லது மவுன குருவா எனக் கேட்கிறார்கள்.. கச்சத்தீவு மீட்கப்படும் என்றார் சுஷ்மா சுவராஜ் என்ன ஆனது. இப்போது வரை அந்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. மீனவர்கள் நலனைக் காக்கத் தவறிய மோடி எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்க வருகிறார்

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. மோடி அரசு என்ன தான் செய்துள்ளது. இங்கே பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்று ஒரு திட்டத்தைச் சொல்கிறார்கள். பெயர் தான் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆனால் இத்திட்டத்தில் அளிக்கும் நிதியுதவியோ சுமார் 60% நிதியை மாநில அரசு தான் தருகிறது. இப்படி தான் வாயால் வடை சூடும் நபராக மோடி இருக்கிறார்.

விவசாய சட்டம்: விவசாயிகளுக்கு எதிராக விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தார். அந்த சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை எதிரிகள் போல நடத்துவது தான் மோடி மாடல். விவசாயிகள் மீது எண்ணற்ற அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதற்கெல்லாம் மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை..

தமிழ்நாட்டிற்கும் கூட எந்த சிறப்புச் சட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை" என்று சொன்ன அவர் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார். மேலும், தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் மக்கள் மிகப் பெரிய பலன் அடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இத்திட்டங்களுக்காகப் பொதுமக்கள் திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கும் மோடி மனதிற்கும் தான் தூரம்: தொடர்ந்து பேசிய ஸ்டாலின், "ராமேஸ்வரத்தை உலக சுற்றுலாத் தலமாக மாற்றிக் காட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படிச் செய்தாரா.. ராமேஸ்வரம்- தனுஷ்கோடியை இணைப்போம் என்றார்கள். அதையும் செய்யவில்லை.. ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் தூரம் இல்லை.. மோடியின் மனதிற்கும் தமிழ்நாட்டிற்கும் தான் தூரம்" என்று அவர் சரமாரியாக விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+