இரட்டை இலக்க தொகுதிகள் டார்கெட்.. ஆரம்பத்திலேயே அலறவிடும் சிபிஎம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்
தூத்துக்குடி: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரம், கட்சி மாறுதல் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம், "இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு மோசமான பட்ஜெட் இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டதில்லை. இந்தியாவின் எந்த பிரிவு மக்களுக்கும் எந்த நல்லதும் செய்யாத மோசமான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அநேகமாக அனைத்து பகுதி மக்களும் இந்த நிதி நிலையை கண்டித்து தங்களின் குரலை பதிவு செய்து வருகிறார்கள்.

விஜய் இப்படி பண்ணலாமா
இதைக் கண்டிக்காத ஒரே தலைவர் விஜய் மட்டும் தான். ஒரு தேசத்தில் நிதி நிலை அறிக்கை என்பது அடுத்த ஓராண்டிற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்பதற்கான ஒரு அறிவிப்பு நடவடிக்கை. ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, அடுத்து நான் தான் முதலமைச்சர் என்று சொல்லி கொண்டும் விஜய் நிதி நிலை அறிக்கை பற்றி எதுவும் சொல்லாமல் வேறு எதை எதையோ பேசி வருகிறார்.
அவர்தான் முதலமைச்சராக துடித்து கொண்டிருக்கிறார். இதற்கு ஒரு தரப்பு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது வருத்தமான விஷயம். சின்ன சின்ன கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கூட இதை கண்டிக்கிறார்கள். விஜய் நிதிநிலை அறிக்கையை ஆதரித்து கூட கருத்து சொல்லட்டும். ஆனால் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது நியாயமில்லை. கூட்டணி தொடர்பாக திமுகவில் இன்னும் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவில்லை.
இரட்டை இலக்க தொகுதிகள்
வழக்கமாக திமுக பேச்சுவார்த்தைக் குழு மூலமாகத்தான் மற்ற கட்சிகளுடன் பேசுவார்கள். ஆகவே திமுக பேச்சுவார்த்தை குழு அமைத்த பிறகு எங்களின் குழு சென்று பேச்சுவார்த்தை நடத்தும். திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோம், என்னென்ன தொகுதிகள் வேண்டும் என்கிற விபரத்தை கேட்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன்.
தனால் இந்தமுறை திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வோம். 234 தொகுதிகளிலும் எந்த தொகுதியில் நின்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இதில் தென் மாவட்டம், வட மாவட்டம் என்று பிரிக்கவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையானது. இவற்றில் 234 தொகுதிகளில் எங்கு யார் நின்றாலும் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications