அப்பா என்னை விட்டுட்டு போய்ட்டீங்களே.. என்னையும் கூப்பிட்டுட்டு போங்க.. கதறிய விஏஓ லூர்துவின் மகன்
தூத்துக்குடி: அப்பா என்னை விட்டுட்டு போய்ட்டீங்களே, என்னையும் கூட்டிட்டு போங்க என தூத்துக்குடியில் மணல் கொள்ளையர்களால் வெட்டி கொல்லப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸின் மகன் கதறிய காட்சிகள் காண்போரை கலங்க செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை அடுத்த சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (45). இவர் ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன் தினம் மதியம் 12.30 மணிக்கு தனது அலுவலகத்தில் இருந்தார்.

அப்போது அங்கு வந்த இருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லூர்துவை சரமாரியாக வெட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். உயிருக்கு போராடிய அவரை சக ஊழியர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் பிற்பகல் 2.40 மணிக்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு போன்சிட்டாள் என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். விஏஓவை அலுவலகத்தினுள் புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர், துணிச்சல் மிக்கவர் என்றும் இதற்கு முன்பு கூட ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றினார் என்றும் அப்போது அவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர் என்றும் ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார். மேலும் தற்போது மணல் திருட்டு தொடர்பாக காவல் துறையில் அவர் புகார் அளித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
முறப்பாடு பகுதி தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் (45) உள்ளிட்டோர் மணல் கடத்தலில் ஈடுபட்டதை அறிந்த லூர்து பிரான்சிஸ் கடந்த 13 ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் ராமசுப்பிரமணியனும் அவரது உறவினர் மாரிமுத்துவும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரிகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராமசுப்பிரமணியனை முறப்பநாடு போலீஸார் கைது செய்தனர். மாரிமுத்துவை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரையும் நேற்று போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் விஏஓ லூர்து பிரான்சிஸின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலை கண்டு அவருடைய மகன் "அப்பா என்னை விட்டுட்டு போய்ட்டீங்களே, என்னையும் கூட்டிட்டு போங்க என கதறிய காட்சிகள் காண்போர் நெஞ்சை கலங்க செய்தன.
இந்த நிலையில் பெண் விஏஓ பிரேமலதா என்ற பெயரில் ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அந்த பெண் வேறு ஒரு விஏஓவிடம் பேசுவது போல் உள்ளது. அதில் விஏஓ சங்கத்தை அவர் கடுமையாக சாடியுள்ளார். அந்த பெண் பேசுகையில், ஆதிச்சநல்லூரில் அவர் ஏற்கெனவே வெட்டுபட்டார். இதையடுத்து "என்னை கொலை செய்துவிடுவார்கள், இடமாற்றம் கொடுங்கள்" என ஆட்சியரிடம் லூர்து சார் கெஞ்சினாரே.
யாராவது மனம் இறங்கினீர்களா. தூத்துக்குடியில் இரு பணியிடங்கள் காலியாக இருந்த நிலையிலும் அவரை ஆதிச்சநல்லூர் வட்டத்தில் முறப்பநாட்டில் பணியில் அமர்த்தினீர்கள், அவர் கேட்டது போல் தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம் செய்தீர்களா, நீங்கள் நடத்தும் சங்கம் சுயநலத்திற்காக மட்டுமே இயங்குகிறது. அன்று லூர்து சாரை இடமாற்றம் செய்திருந்தால் இன்று அவருடைய உயிர் போயிருக்காது.
இத்தனைக்கு நடுவில் வெட்கமே இல்லாமல் அவரது உடலை பார்த்து அழுது நாடகம் போடுகிறீர்கள். அவர் இருந்திருந்தால் நீங்கள் பக்கத்தில் கூட போயிருக்க முடியாது. இரு காலிப்பணியிடங்கள் இருந்த போதெல்லாம் லூர்து சார் கேட்ட போது அவருக்கு கொடுக்காமல் உங்கள் சுயநலத்திற்காக இரு பெண்களுக்கு கொடுத்தீர்கள். அந்த பெண்கள் என்ன தியாகிகளா? என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர்களின் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications