DMK Congress: திமுக கூட்டணியில் தேமுதிக இன்! காங்கிரஸ் out? கனிமொழி சொன்ன பதிலை பாருங்க!
தூத்துக்குடி: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைத்திருக்கும் மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்கத்தான் தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைத்துள்ளார்கள் என பேச்சு பரவலாக இருந்து வரும் நிலையில் கனிமொழி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை எனக் கூறி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு, "பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகளும் வருவதில்லை.
இருப்பினும், அவர் அதை முறையாகப் படித்துப் பார்த்தால், இளைஞர்களின் எதிர்காலத் தேவைகள், விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏதாவது ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது சரியானதாக இருக்காது" என்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜக கூறி வருவது குறித்த கேள்விக்கு, "பாஜக தனது கூட்டணியைச் சரியாக வைத்துக் கொண்டாலே போதும்; அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக பலமாக நிலைத்திருக்கும் ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
மாநிலத்தையே கொண்டு போய் அடகு வைத்தவர் தான் எதிர்க்கட்சித் தலைவர். இன்னைக்கு நேற்று அல்ல; திமுகவின் அடிப்படை கொள்கையே 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதே. ஒருவேளை அவருக்கு இது தெரியாமல் இருக்கலாம்" என்று கனிமொழி விமர்சித்தார்.
திமுக கூட்டணியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்பு விட்டு விட்டு கூட்டணி அமைத்திருந்தாலும் 2014 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் பயணித்து வருகிறது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுவது போல் சில நிர்வாகிகளின் பேச்சுகள் இருந்தன. அதிலும் குறிப்பாக மாணிக்கம் தாகூர், திமுகவின் பழைய தோல்விகள் குறித்து பேசுவதும் அதற்கு திமுகவினர் பதிலடி கொடுப்பதும் என இருந்தது.
கடந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பலரும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்றனராம். ஆனால் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், தவெகவுடன் கூட்டணிக்கு செல்வது என்பது தற்கொலை முயற்சிக்கு சமம் என்பதால் திமுக கூட்டணியிலேயே தொடர்வதுதான் நல்லது என்றனராம்.
இதை ஏற்ற காங்கிரஸ் தலைமை, கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என்ற உத்தரவிட்டது. ஆனாலும் மாணிக்கம் தாகூர், அவரது ஆதரவாளர்கள் திமுகவை அதிகார திமிர் என்றெல்லாம் விமர்சித்துதான் வந்தனர்.
இந்த நிலையில்தான் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணியில் பிளவு இல்லை என கனிமொழி தெரிவித்துள்ளார். அது போல் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் தற்போது மாணிக்கம் தாகூரும் இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications