எல்லோர் குரலையும் மதிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - கனிமொழி எம்.பி பேச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
Recommended Video
சிறப்புரையில், திமுக அரசின் சாதனைகள் குறித்தும், அரசு மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்.

அதேபோல தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இங்கிருந்தே ஏற்றுமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள செபத்தையாபுரத்தில் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கத்தின் 150 வது ஆண்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 150 வது ஆண்டு மலரை வெளியிட்டனர்.
இதனையடுத்து சிறப்புரையாற்றிய கனிமொழி, "விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவது திமுக அரசுதான். கலைஞர்
ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதேபோல் விவசாயிகளுக்கு கடன்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் கருத்துக்களும் விவசாய கருத்துகளும் தொழிலாளர்கள் கருத்துகளும் அடிமட்ட மக்களின் கருத்துகளையும் கேட்டு செயல்படுத்தக்கூடிய அரசுதான் இந்த திராவிட மாடல் அரசு." என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "எல்லோரின் குரலுக்கும் பதில் அளிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்போது தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெறும்போது விவசாயிகள், விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை செய்து கொடுக்க காத்திருக்கும் அரசுதான் திமுக அரசு" என்றும் கனிமொழி தனது உரையில் கூறினார்.
தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் பெரிய வகை விமானங்கள் வந்து இறங்கும் வகையிலான ஓடுதளம் விரிவாக்கம், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு நிலையம், பயணிகள் முனையம் உள்ளிட்ட பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறன. இந்த பணிகள் நிறைவுறும் பட்சத்தில் தூத்துக்குடி மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியும் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
அரசுனு ஏதாவது இருக்கா.. கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் கொடுமை சம்பவம்.. கனிமொழி காட்டமான கேள்வி












Click it and Unblock the Notifications