தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் திட்டமில்லை..மக்கள் பணத்தை வீட்டிற்கு கொண்டு போகத்தான் அதிமுக திட்டமிட்டது- கனிமொழி ஆவேசம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி : மக்களுக்கான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் போடவில்லை எனவும், மக்கள் பணத்தினை அதிமுவினர் அவர்கள் வீட்டிற்கு கொண்டு போகதான் திட்டம் போட்டார்கள் என திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

    #TNLocalBodyElection கோவில்பட்டி: நீட் தேர்வு விலக்கில் திமுக உறுதி: கனிமொழி எம்.பி. திட்டவட்டம்!

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம், புதூர் எட்டயபுரம்,பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

    திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்,விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

    ஆடாமல் ஜெயிச்சுட்டோமே..போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்..நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ட்விஸ்ட்ஆடாமல் ஜெயிச்சுட்டோமே..போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளர்கள்..நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ட்விஸ்ட்

    மக்களுக்கான திட்டங்கள்

    மக்களுக்கான திட்டங்கள்

    இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களுக்கான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் போடவில்லை எனவும், மக்கள் பணத்தினை அதிமுவினர் அவர்கள் வீட்டிற்கு கொண்டு போகதான் திட்டம் போட்டார்கள், தமிழக மீனவர்களுக்கான நியமனத்தினை மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி பெற்று தர வேண்டும் என்றார்.

    திமுகவுக்கு நற்சான்று

    திமுகவுக்கு நற்சான்று

    9 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக வெற்றிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு மக்கள் நற்சான்று வழங்கியுள்ளனர். தற்பொழுது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அரசு சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறது என்பதனை அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மக்கள் உணர்த்துவார்கள்.

    திட்டங்கள் இல்லை

    திட்டங்கள் இல்லை

    மக்கள் பணி சரியாக செய்யவில்லை என்பதால் தான் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக இருந்து பிரச்சாரம் செய்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வித திட்டங்களும் போடவில்லை, மக்கள் பணத்தினை அவர்கள் வீட்டிற்கு (அதிமுக) எடுத்துச் செல்வதற்கும் திட்டம் போட்டு செயல்பட்டனர்.

    நீட் தேர்வு விலக்கு

    நீட் தேர்வு விலக்கு

    நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தர வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஆளுநர் கையெழுத்து போடாமல் இருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாக இருக்கிறது. நீட் பிரச்சினையில் தமிழகம் முழுமையான வெற்றி பெற வேண்டும், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்வார் என்றார்.

    English summary
    Kanimozhi, the DMK women's secretary and Thoothukudi MP, has accused the AIADMK of not putting up plans for the people during its rule and that the AIADMK was planning to take people's money home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X