ஸ்டாலின் பற்ற வைத்த லைட்டர்.. 'இந்த லட்சணத்தில் நீங்கள் போராடுறீங்க'.. குஷ்பு அதிரடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவங்களால பண்ண முடியாததை இன்று மத்திய அரசு செய்கிறது. தொகுதி மறுவரை சட்டம் கொண்டு வருவதால் திமுகவிற்கு மட்டும்தான் பாதிப்பு இருக்கிறதா? திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது - தொகுதி மறுவரை அரசியல் செய்கின்றனர்" என்றார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜீவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ செய்தியாளர்களிடம் பேசுகையில், "எந்த சட்டம் கொண்டு வந்தாலும் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவங்களால பண்ண முடியாததை இன்று மத்திய அரசு செய்கிறது. தொகுதி மறுவரை சட்டம் கொண்டு வருவதால் திமுகவிற்கு மட்டும்தான் பாதிப்பு இருக்கிறதா? இந்தியா முழுவதும் வேறு எங்காவது இதற்கு போராட்டம் நடத்துகிறார்களா?

DMK members are engaging in political maneuvering regarding constituency delimitation Khushbu

அப்புறம் திமுகவுக்கு மட்டும் என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேட்கிறேன்.. மற்ற மாநிலங்களில் போராட்டம் நடத்துகிறார்களா? எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா இல்லையில்ல. அப்பம் தெளிவாக தெரிகிறது திமுக இதில் அரசியல் மற்றும் பண்ணுகிறார்கள் . திமுகவிற்கு தோல்வி பயம் எப்போதோ வந்திருச்சு.. அடுத்த தேர்தலில் அவர்கள் ஜெயிக்கப் போறதில்லை,.. இந்த தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் திமுகவில் இருக்கும் அத்துனை பேருக்கும் தெரிகிறது. அதனால்தான் இப்படி செயல்படுகின்றனர்.

இன்றைக்கு காலையில போராட்டம் நடத்துனாங்க.. ல பிளாஸ்டிக் லைட்டரை வைச்சி தீ பற்ற வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிளாஸ்டிக் தடை இருக்கிறது என்று முதல்வருக்கு தெரியவில்லையா? இந்த லட்சணத்தில் நீங்கள் மாநிலத்தை காப்பாற்ற போகிறீர்களா? ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீங்கள் வேலை செய்தால், மக்களுக்காக என்னத்த போராடுறீங்க... சும்மா முதல் பக்க செய்தி இருக்க வேண்டும் என்பதற்காக, பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட நிலையில் லைட்டர் வைத்து போராடுவதில் இருந்து அவங்களுடைய செயல் மற்றும் மனநிலை எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள் என்றார்

தொகுதி மறு வரை குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும். அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, அதனால் அவரைப் பற்றி பேசனும் அவசியம் இல்லை என்றார்

மேலும் குஷ்பு பேசும் போது, திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் தகாத வார்த்தைகளில் பேசுவது பழக்கமாகி போச்சு.. அவர்களை கேட்பதற்கு ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . அவங்களுடைய வயதுக்கு மரியாதை, ஸ்டேட்டஸ்க்கு மரியாதை.. எதுவுமே கிடையாது.. நாங்கள் திமுகவினரை பார்த்தால் இன்றைக்கும் அவங்க இவங்க என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறோம்..

அவன் இவன் என்று பேசியதில்லை. வார்த்தைகளால் வர்ணிக்கவில்லை. அரசியல் ரீதியாக மட்டும் தான் நாங்கள் அவர்களை விமர்சிக்கிறோம். மக்களுக்கு என்ன செஞ்சீங்க என்ன செய்யல. என்ன செஞ்சீங்க என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இது செஞ்சிருக்கோம் என்று சொல்லுங்க .. நீங்கள் செய்யவில்லை அதனால் தான் உடனடியாக எங்களைப் பார்த்து விரலை நீட்டி பேசுறீங்க, எங்களை திட்டுகிறீர்கள், தகாத வார்த்தைகளில் வர்ணிக்கிறீர்கள் நீங்கள் மக்களுக்கு எதுவும் நல்லது செய்யவில்லை அதை அவர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். ஒத்துக்கொண்டு தேவையில்லாமல் எங்கள் மீது பழி சுமத்துகின்றனர்.

முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று பேசியுள்ளார். அது எப்படி பேசினார். என்ன வார்னிங் கொடுக்கிறாரா? மிரட்டுகிறாரா? இன்றைக்கு வரை தமிழ்நாட்டு மக்களை மட்டும் மிரட்டிக் கொண்டிருந்தனர். இப்போது மத்திய அரசு, பிரதமரை பார்த்து மிரட்டுறீங்க, உங்க குரல் எப்படி இருக்கு.. வேறு மாநிலத்திலிருந்து முதல்வரை மிரட்டினால் திமுக காரங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள். நாங்கள் ஒன்னும் எதிர்வினை ஆற்றவில்லை..
எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது மரியாதை. சுயமரியாதையை சொல்லிக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

இன்றைக்கு திமுகவினர் சுயமரியாதை மறந்து விட்டு தகாத வார்த்தைகள், கெட்ட வார்த்தைகள் முதல்வர் மட்டுமல்ல அவரை சுற்றி இருக்கும் அத்தனை பேரும் இந்த மாதிரி பேசும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திமுக எங்கே இருக்கு, அதை எங்கே சேர்த்து புதைத்து வைத்திருக்கிறார்கள்" இவ்வாறு குஷ்பு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+