"நோ, நோ.. ஊரு பாவம்.. ஊரை விட்டுருங்க.." 'எடப்பாடி' பழனிச்சாமியை கலாய்த்த கனிமொழி.. குபீர் சிரிப்பலை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சமாதானபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்பி கனிமொழி, "முன்னாள் முதல்வர் பழனிச்சாமி" என சொன்னபோது கூட்டத்தில் இருந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி என்றார்கள். அதற்கு கனிமொழி "பாவம் எதுக்கு ஊரை இழுக்கிறீர்கள்" என நகைச்சுவையாக கேட்டார்.
Recommended Video
இதுகுறித்து சமாதானபுரத்தில் திமுக எம்பி கனிமொழி பேசுகையில், உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலைவிட மிக முக்கியமான தேர்தலாகும். உள்ளாட்சி அமைப்பினர்தான் அரசுக்கும் மக்களுக்கும் இடையே பலமாக பாலமாக இருக்கக் கூடியவர்கள்.
எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள், அவர்களின் தேவை என்ன என்பதை தெரிந்து கொண்டு பணியாற்ற கூடியவர்கள் இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள். அரசின் திட்டங்களை வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பவர்கள். வேறு யாரையாவது தவறானவர்களை தேர்வு செய்துவிட்டால் முதல்வருக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே திட்டங்கள் பொது மக்களை போய் சேர முட்டுக்கட்டை போடுவார்கள்.

அரசுக்கு நஷ்டம்
இதனால் நஷ்டம் மக்களுக்கும் அரசுக்கும்தான். முதல்வர் சொல்வது போல் உள்ளாட்சியிலும் தொடரட்டும் நல்லாட்சி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி... என எதையோ சொல்ல வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி என சொல்ல, கனிமொழி சிரித்துக் கொண்டே பாவம் எதுக்கு ஊர் பேரை இழுக்கிறீர்கள் என நகைச்சுவையாக கேட்டு தனது பேச்சை தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
உள்ளாட்சியில் மிக சிறப்பான பணிகளை செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். நான் கேட்கிறேன், நீங்கள்தான் தேர்தலே நடத்தலையே, அப்பறம் எப்படி உள்ளாட்சியில் சிறப்பாக பணி செய்ய முடியும்? கொரோனா கால கட்டத்தில் ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் எத்தனை ஊழல் செய்தீர்கள் என எங்களுக்கு தெரியும். 8 மாதமாகியும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லைனு சொல்கிறார்.

வாக்குறுதிகள்
அதிமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? பொது இடங்களில் மாணவர்களுக்கு இலவச வைஃபை என அறிவித்தார்கள், அது என்னவாயிற்று? ரேஷன் கார்டு இருக்கக் கூடியவர்களுக்கு செல்போன் தருவதாக சொன்னீர்கள். எத்தனை பேருக்கு செல்போன் கிடைத்தது? பெண்கள் ஆட்டோ வாங்க ரூ 25 ஆயிரம் கொடுப்பதாக சொன்னார்கள், எத்தனை பெண்களுக்கு அந்த பணம் கிடைத்தது?

முதல்வர் சொன்னார்
கொரோனா கால கட்டத்தில் ரூ 1000 அதிமுக ஆட்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அதை ரூ 5000 ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தது. ஆனால் அதிமுக செய்யவில்லை. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள ரூ 4000 கொடுப்பதாக முதல்வர் சொன்னார், அதை கொடுத்தார்.

கஜானா காலி
திமுகவை பார்த்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சொல்லும் தகுதி, அருகதை யாருக்கும் கிடையாது. அதிமுக கஜானாவை காலி செய்துவிட்டு போன நிலையில் ஒவ்வொரு திட்டத்தையும் செய்வது என்பதே போராட்டமாக இருக்கிறது. ஆனாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செய்வேன் என முதல்வர் தீர்மானமாக உள்ளார்.

10 ஆண்டுகள் வேலையின்மை
கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் இல்லை. முதலீட்டாளர்கள் மாநாட்டை கோடி கோடியாக செலவு செய்து அனுப்பினார்கள். ஆனாலும் யாரும் முதலீடு செய்யவில்லை. தென் தமிழகத்திற்கு தொழிற்சாலைகள் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அது நிறைவேற்றப்படவில்லை. தென் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக தொழிற்சாலைகளை அமைப்பதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள்
ஒடுக்கப்பட்ட மக்களும் உயர் கல்வி படிக்க வேண்டும் என மாவட்டந்தோறும் மருத்துவக் கல்வியை தொடங்கினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்து அந்த குழந்தைகளும் படிக்க முடியாத ஒரு சூழலை கொண்டு வருகிறார்கள். இதற்கு எதிராக தொடர்ந்து உரிமை குரல் எழுப்பி கொண்டிருக்கும் இயக்கம் திமுக.

நீட் விலக்கு தீர்மானம்
அனைத்து கட்சிகளையும் அழைத்து சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றும் போது அதை எதிர்த்து ஒரு 4 பேர் வெளியே சென்றுவிட்டார்கள். அவர்கள் தமிழகத்திற்கு எத்தனை பெரிய துரோகத்தை செய்கிறார்கள் என நினைத்து பாருங்கள். இந்தி திணிப்பு, மதத்தின் பெயரால் அரசியல் என தமிழகத்தை பிளவுப்படுத்தக் கூடியவர்கள் பாஜகவினர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு வாக்களியுங்கள். நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்த போட்டியிட்ட நிலையில் தற்போது நகர்ப்புற தேர்தலில் மட்டும் கூட்டணி இல்லையாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியாம். இப்படியெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என்றார் கனிமொழி.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications