Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடிக்க தண்ணீர் இல்லை.. காலி குடங்களுடன் மறியல்.. திருச்செந்தூர் சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குடிக்க கூட தண்ணீர் இல்லை என்று கூறி காலி குடங்களுடன் வல்லநாடு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூத்துக்குடி திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. காலை நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தூத்துக்குடிக்கு கடந்த 1896-ம் ஆண்டு கோரம்பள்ளம் குளத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த குளத்தில் இருந்து வாய்க்கால் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர், நகரின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த கிணறுகளில் தேக்கி வைத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை. இதனால் தூத்துக்குடியில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வல்லநாட்டில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முதல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்தொடர்ச்சியாக 2, 3-வது குடிநீர் குழாய் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 4-வது குடிநீர் குழாய் திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளன.

Drinking water issue People protest Thoothukudi Tiruchendur Road Traffic affected

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் வல்லநாடு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் உள்ள நீரேற்று நிலையங்களில் இருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் தண்ணீர் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப குடிநீர் தேவையும் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது ஒரு நாளைக்கு சுமார் 39 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் தாமிரபரணி ஆற்றில், போதுமான குடிநீர் பம்பிங் செய்ய முடியாத காரணத்தால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் நீடித்து வந்தது.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து உள்ளதாலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

தாமிரபரணி தண்ணீர் இல்லாவிட்டாலும், மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக கூடுதலான தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு வார காலத்திற்குள் குடி தண்ணீர் வரத்து சீராகிவிடும் என்றும் கடந்த மே மாதம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியிருந்தார். அதுவரை பொதுமக்கள் சிரமத்தினை பொறுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இதனிடையே வல்லநாடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக குடிநீர் வரவில்லை என்று கூறி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குடிக்க கூட தண்ணீர் இல்லை என்று கூறி காலி குடங்களுடன் வல்லநாடு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூத்துக்குடி திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. காலை நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலை மறியல் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை தாமதம் காரணமாக நடப்பாண்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தடுப்பணைகள், அணைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. ஆறுகளில் தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் பல ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+