சுட்டெரித்த வெயில்! கடவுள் முன் அனைவரும் சமம்! செண்பகவல்லி அம்மனுக்கு துரை வைகோ தந்த காணிக்கை!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட துரை வைகோ தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டார்.
தேரோட்டம் தொடங்க இன்னும் நேரமாகும் என்பதால் வெயிலில் நிற்காமல், கோவிலுக்குள் நிழலில் அமருமாறும் தேரோட்டம் தொடங்கும் போதும் உங்களை அழைக்கிறோம் எனவும் துரை வைகோவிடம் கட்சியினர் கூறியுள்ளனர்.

வெயிலில் நின்று தன்னை தானே வருத்திக் கொள்வதை இந்த செண்பகவல்லி அம்மனுக்கு தரும் காணிக்கையாக கருதுவதாகவும் தேரோட்டம் தொடங்கும் வரை வெயிலில் நிற்பதையும் பக்தியாகவே தாம் உணர்வதாகவும் துரை வைகோ கூறியிருக்கிறார்.
கோவில்பட்டி நகரம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான தொழில் நகரமாகும்.இந்த நகரில் இருக்கும் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத சாமி திருக்கோவில் மிகப் பழமையானது.
செண்பக மன்னனால் கட்டப்பட்டதால், இக்கோவிலின் அம்மனுக்கு செண்பகவல்லி அம்மன் என்ற பெயர் வந்திருக்கிறது.

இக்கோவிலின் முக்கிய திருவிழாவான பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 13 ம் தேதி அன்று நடந்தது.
கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து,தேரோட்ட நிகழ்வை தொடங்கி வைக்கும் நிகழ்வில் துரை வைகோ கலந்துகொண்டார்.
அப்போது தான் தேரோட்டம் தொடங்கும் வரை வெயிலில் நிற்க வேண்டாம் என துரை வைகோவிடம் கட்சியினர் அக்கறையின் பேரில் கூறியிருக்கின்றனர்.

அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்த துரை வைகோ, "கடவுள் முன் அனைவரும் சமம். இந்த தேரோட்ட நிகழ்வில் பங்கு கொள்ள வந்த மக்கள், பெண்கள், குழந்தைகள் இந்த வெயிலில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல நானும் ஒருவன்.அவ்வளவு தான்.''
மேலும், ''இந்த வெயிலில் நின்று என்னை வருத்திக் கொள்வதை இந்த செண்பகவல்லி அம்மனுக்கு தரும் காணிக்கையாக நான் கருதுகிறேன். அதனால் நிகழ்வு தொடங்கும் வரையில் நான் இப்படி வெயிலில் நிற்பதையும் பக்தியாகவே நான் உணர்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications