Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திக் திக் மோடில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. குறுக்கே வந்த அமலாக்கத்துறை! இன்று வழக்கு விசாரணை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை இணைக்கக்கோரி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய இவர், 2001 - 2006 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அட்சியில் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் மீது 2006 முதல் 2011 வரை நடைபெற்ற கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையால்சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக முடிவுகள் கிடைக்கவில்லை.

ED case on Minister Anitha Radhakrishnan is to be heard today

இந்த சொத்து குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டது. ரூ.2.07 கோடி சொத்துக்களை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை இணைக்கக்கோரி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கேட்டது. தற்போது அமைச்சராக பதவி வகித்து வரும் அனிதா ராதாகிருஷ்ணனின் வழக்கு விசாரணைக்கு உதவ அமலாக்கத்துறையை இணைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி நீதிமன்றம், கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்களைத் தாக்கல் செய்த அமலாக்கத்துறை தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தது. அப்போதே இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் அமலாக்கத்துறை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் அன்றைய தினமே வழங்கப்படும் என பல எதிர்பார்த்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் தீர்ப்பும் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+