கூந்தலாவது கூட்டணியாவது.. கிட்ட யாரும் வராதீங்க.. "ஆடு"ன்னு அதிமுக போட்ட போடு.. கதிகலங்கிய பாஜக.. ஓஹோ
தூத்துக்குடி: அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு வந்துள்ள நிலையில், இதை அதிமுகவினரும் ஆமோதித்து வரவேற்று வருகிறார்கள்.. இந்த அணுகுமுறையை, பாஜகவினர் உற்றுகவனித்து வருகிறார்கள்.
"அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லிவிட்டார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக கருத்து: இதனால், கூட்டணி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. கட்சியின் முடிவையே தான் எப்போதும் சொல்வேன் என்று ஜெயக்குமார் கூறியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் கருத்தாகவும், ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதுவரை அதிமுகவின் கூட்டணி முடிவு குறித்து வாய் திறக்கவில்லை.
ஆனால், அதிமுக தலைவர்கள் இதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், "அதிமுக கூட்டணியில் யார் அங்கம் வகித்தாலும் அவர்கள் செல்லும் நோட்டு. அதுவும் டாலர் நோட்டு.. கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் கிழிந்த இத்துப்போன செல்லாத நோட்டு" என்றார்.
அண்ணாமலை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியோ, அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது.. ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை. அண்ணா பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை. இது ஒரு தலைவருக்கான தகுதியும் கிடையாது" என்றார். மறுபடியும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு, கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார், "கூட்டணியும் கிடையாது... ஒரு புண்ணாக்கும் கிடையாது" என்று டென்ஷனாக சொன்னார்.
இப்படி வெளிப்படையாகவே கூட்டணி பற்றி பேசிவரும்நிலையில், அதை போஸ்டர் அடித்தும் ஒட்ட துவங்கிவிட்டார்கள் அதிமுகவினர்.. குறிப்பாக, தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், மொத்த பேரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. தூத்துக்குடி சிவன்கோயில் தெரு நுழைவுப் பகுதியிலும், ஜெயராஜ் ரோட்டிலும் இந்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆடு மேய்க்க விட்டு: அதில், "ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம். கூட்டணியாவது, கூந்தலாவது... நன்றி மீண்டும் வராதீர்கள், கூட்டணியில் பாஜக இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு.. நாளை நமதே... 40ம் நமதே" என்ற வாசகங்கள் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி 39வது வட்ட செயலாரும், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம், அதே இளைஞரணி துணைச் செயலாளர் டாக்டர் எஸ்பி டைகர் சிவா ஆகியோர் ஒட்டியுள்ளனர். ஆனால், ஜெயக்குமார் பேசியதற்காகட்டும், நேற்று எஸ்பி வேலுமணி விமர்சித்ததற்காகட்டும், இப்படி போஸ்டர் அடித்து ஒட்டியதற்காகட்டும், இதுவரை தமிழக பாஜக தலைவர் மவுனம் காத்து வருகிறார்.
திருப்பதி நாராயணன்: மூத்த தலைவர் திருப்பதி நாராயணன் இந்த விஷயத்தில் பொறுமையை கடைப்பிடித்தாலும், பாஜக தரப்பில் பெரும்பாலும் யாருமே அவ்வளவாக ரியாக்ட் செய்யாமல் உள்ளனர்.. எனவே, மேலிட பாஜகவிலிருந்து எந்தமாதிரியான ரியாக்ஷன்கள் வரப்போகிறதென தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி












Click it and Unblock the Notifications