அட.. காக்காவ விரட்டுங்கப்பா! பிரஸ் மீட்டின்போது திடீர் ஷாக்.. சிரித்தபடி சமாளித்த எடப்பாடி பழனிசாமி!
தூத்துக்குடி: இன்று திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. பிரஸ் மீட்டின் போது அவரது சட்டையில் காகம் எச்சமிட்டதையடுத்து, சிரித்துக்கொண்டே, "அந்த காக்காவை விரட்டுங்கப்பா" எனச் சொல்லி கலகலப்பாக்கினார் எடப்பாடி பழனிசாமி.
இன்று திருச்செந்தூர் சென்று சுப்ரமணியசுவாமி கோவிலில் வழிபட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்றார். இன்று காலை 7.30 மணி அளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இரு தரப்பினர் அடிதடியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார். அரசியல் எதிரிகள் தொல்லை ஒழிய இன்றைய தினம் சஷ்டி திதியன்று எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
பின்னர், சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுகவின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய திமுக அரசின் வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.
திமுக அமைச்சர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தன் மீதே ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்." எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது அப்பகுதியில் மேலே பறந்த காகங்கள் கரைந்து கொண்டே இருந்தன. அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் சத்தம் போட்டு காகத்தை விரட்ட முயன்றனர். திடீரென காகம் எடப்பாடி பழனிசாமி சட்டையில் எச்சமிட்டது. அருகில் நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதனைத் தட்டிவிட்டார். "அட அந்த காக்காவ விரட்டுங்கப்பா" என சிரித்தபடி கூறி, நிலைமையை சகஜமாக்கினார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications