சென்னை, பெங்களூர், தூத்துக்குடி விமான பயணிகளே.. கால் டாக்சியை கேன்சல் பண்ணுங்க
தூத்துக்குடி: டிட்வா புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட கடலோர மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

விமான நிலையம் அமைந்துள்ள வாகைகுளம் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து மோசமான வானிலை மற்றும் விமான நிலைய ஓடு பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று காலை முதல் இயக்கப்பட வேண்டிய ஐந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டிய விமான சேவையும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .
விமான சேவை ரத்து காரணமாக விமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் போக கால் டாக்சி புக் செய்யாமல் மாற்று வழியை யோசியுங்கள் பயணிகளே. நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.
கடந்த சில நாட்களாக டிட்வா புயல் தீவிரம் காட்டுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அவசர சேவை மற்றும் மீட்புத் துறைகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை தேவையற்ற பயணம் செய்யாமல் பாதுகாப்பாக இருப்பதை கவனிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications