சட்டமன்றத்தில் திமுகவே அசந்து போயிருச்சு.. அதிமுக தான் எப்பவும் நம்பர் 1 .. சொல்கிறார் கடம்பூர் ராஜு
தூத்துக்குடி : தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொலை கொள்ளைகள் அதிகரித்து உள்ளது என முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், உள்ளிட்டவைகளை வழங்கினார்.

அதிமுக கடம்பூர் ராஜு
பின்னர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் இருக்கும் போதும் நம்பர் ஒன் கட்சியாக திகழ்வது அதிமுக தான்.

பட்ஜெட் கூட்டத்தொடர்
திமுகவே அசந்து போகும் அளவுக்கு கடந்த 4 நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருந்தது. வரும் சட்டமன்ற கூட்டத்தில் தொடரில் திமுக அரசின் அவலங்களை நாங்கள் எடுத்துரைப்போம்.

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி
இந்த அரசு செயல்படாத திட்டங்களை முன்வைப்போம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம். ஆளும் கட்சி கவனத்திற்கு எவ்வாறு எடுத்துச் செல்கிறோம் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சி வந்ததும் ரத்து செய்துள்ளனர். குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துள்ளனர்.

கொலை கொள்ளைகள்
இதற்கு மக்கள் மன்றத்தில் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். 1980களில் திமுகவினர் கூறிய வசனம் ஞாபகப்படுத்து விதமாக அமையும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொலை கொள்ளைகள் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications