அடுத்தடுத்து உள்ளே சென்ற 4 பேர்.. கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி பலி.. தூத்துக்குடியில் சோகம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று விஷவாயு தாக்கி 4 பேர் பலியான சம்பவம் மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் இருக்கும் கீழ செக்காரக்குடி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் சோமசுந்தரம் என்ற நபரின் வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய 4 பணியாளார்கள் சென்றுள்ளனர். கழிவுநீர் தொட்டி உள்ளே பாலா, தினேஷ், பாண்டி, இசக்கிராஜா ஆகிய நான்கு பேர் சென்று இருக்கிறார்கள்.
அதன்படி தொட்டிக்குள் சென்ற இசக்கி ராஜா , பாலா ஆகிய இரண்டு பேரும் உள்ளேயே மயங்கி விழுந்து உள்ளனர். அவர்களை மீட்க உள்ளே சென்ற தினேஷ், பாண்டி இருவரும் அடுத்தடுத்து சென்றுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் உள்ளேயே அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
விஷயவாயு தாக்கி உள்ளேயே அவர்கள் மயங்கி விழுந்தனர். அதன்பின் அவர்கள் நான்கு பேரின் உடலையும் தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து மீட்டனர். இது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications