விடிய விடிய கொட்டிய மழை பெருகிய வெள்ளம் - 5 நாட்களுக்கு மிக கனமழை வெளுக்கப்போகுது

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நவம்பர் 3ஆம் தேதி வரைக்கும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த சில தினங்களக பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Heavy rain Increased flooding - Rain continues for 5 days IMD Prediction

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரும். இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் அதி கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் முழுவதும் கனமழை பெய்து வருகிறது பலத்த மழை காரணமாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்,வண்டிக்காரத் தெரு, அரண்மனை போன்ற பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகள் பள்ளத்தில் விழுந்து எழுந்து வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தொடர் மழையால் ராமநாதபுரம் பொது மக்களின் வாழ்வும் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலை தொடர்ந்தால் ராமநாதபுரத்தில் நகர் முழுவதும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலையில் மழை நீர் சாக்கடையில் கலந்து நோய்கள் உருவாகும் சூழ்நிலையில் ராமநாதபுரம் நகர் தத்தளித்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும்,நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மழைநீரை அகற்றினால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் மிதக்கும் மருத்துவமனை

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களக பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் லேசான தூறலுடன் தொடர்ந்து பெய்தது. இரவு நேரங்களில் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகள், தெருக்கள், குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கியது.

மேலும் சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள், மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம்,கடலூர்,விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மதுரை,சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+