கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கில் நடந்தது என்ன என்பது குறித்து கைதான கார்த்தி, போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் குழந்தையை ஏன் கொன்றார், எதற்காக கொலை செய்தார் போன்ற விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

sulur 10 years old girl murder

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி போலீஸிடம் இருந்து தப்பிய போது கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கைதிகளுக்கான சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது: கடந்த 21 ஆம் தேதி வீட்டின் முன்பு அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி கார்த்தி அழைத்து சென்றுள்ளார். வழியில் சாக்லேட், மிட்டாய் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு பிறகு மீண்டும் வீட்டிற்கு செல்லலாம் என வண்டியில் அமர வைத்து குளக்கரைக்கு அழைத்து சென்றாராம்.

அங்கு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போது குழந்தை கத்தியதாம். அதற்கு கத்த கூடாது என அந்த குழந்தையை கார்த்தி மிரட்டினாராம். அதையும் மீறி சிறுமி அலறியதால் என்ன செய்வது என்ற பயத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்த முள் புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இவ்வாறு போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குளக்கரையில் இருந்து சென்ற போது அங்கு அவருடைய நண்பர் மோகன்ராஜை பார்த்து நடந்தவற்றை கூறி கார்த்தி உதவி கேட்டுள்ளார். அவரும் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் உதவி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

நடந்தது என்ன

இந்த சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி கூறியிருப்பதாவது: இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: கடந்த 21 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு சூலூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடத்திலிருந்து 100- க்கு போன் செய்து ஒரு புகார் சொல்லப்பட்டது. அதில் 10 வயது சிறுமியை மாலை 5 மணி முதல் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து குழந்தையை 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் நடந்தன. 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளில் கிடைத்த ஆதாரத்தை வைத்து தேடினோம். இந்த நிலையில் குழந்தை கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குளம் அருகே சடலமாக 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மீட்கப்பட்டது.

இதையடுத்து எங்களுக்கு கிடைத்த தகவல் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து அதே பகுதியை சேர்ந்த நாகை மாவட்டம் கார்த்திக் (33) என்பவர் பதுங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

அப்போது கார்த்திக் போலீஸிடம் இருந்து தப்ப மாடியில் இருந்து குதித்த போது வலது கை, வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜையும் கைது செய்துள்ளோம்.

கார்த்திக் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

விசாரணையில் குழந்தையை ஆசை வார்த்தை கூறி கார்த்தி என்பவர் அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுமியின் குடும்பம் அந்த பகுதிக்கு 20 நாட்களுக்கு முன்புதான் குடி வந்தனராம். கார்த்தியும் மோகன்ராஜும் கூலித் தொழிலாளர்கள். கார்த்திக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து இருக்கிறார். கார்த்தி போதை வஸ்துகள் ஏதும் பயன்படுத்தவில்லை.

குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்டு கைது செய்துள்ளோம், இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண தொகை கிடைக்க செய்வோம். குழந்தையை எப்படி கொன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ரம்யா பாரதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+