சாத்தான்குளம் ராஜாசிங் மீது தாக்குதல்: அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவு
மதுரை: கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர், காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கோவில்பட்டி சிறையிலேயே சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர், போதிய மனநல ஆலோசனை வழங்க டிஜிபி பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விசாரணை கைதியும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பரபரப்பாக பேசப்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த கைதி சாத்தான்குளம் பனைகுளத்தினை சேர்ந்த ராஜாசிங்,36 என்பவராவார். ராஜாசிங், கொலை வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 21ஆம்தேதி கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேராவூரணி சிறையிலும், பின்னர் நெல்லை பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 17ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திடீரென ராஜாசிங்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைகாவலர்கள் அவரை உடனே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்,கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications