Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உண்டியல் காசையே உற்றுப்பார்த்த தூத்துக்குடி பெண் ஏட்டு.. சங்கரன்கோயில் கோயிலுக்குள் யாரந்த 4 பேர்?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: சங்கரன்கோவிலுள்ள பிரபல சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும்போது 4 பேர் சிக்கியிருக்கிறார்கள்.. இவர்கள் 4 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

தமிழகத்து கோயில்களில் உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.. இந்த திருட்டுக்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்து முன்னணியும் தொடர்ந்து கோரிக்கை வைத்தவாறே உள்ளது..

thoothukudi head constable

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், தமிழக அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைகொள்வதாக தெரியவில்லை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் விடாமல் தெரிவித்து வருகிறார். எனினும் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை. அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு நிறைந்த திருப்பதி கோவிலிலும், நேற்றைய தினம் திருட்டு நடந்துள்ளது. அதுவும் இரும்பு உண்டியலில் திருட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

சோதனைகள்: வழக்கமாக, சுவாமி தரிசனத்திற்கு செல்லும் வழிகளில் 3 இடங்களில் பக்தர்கள் அனைவருமே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.. இதைத்தவிர, கடைசியாக கோவில் ராஜகோபுரத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவும், சோதனை நடத்தப்படுகிறது.. இதைத்தவிர சிசிடிவி கேமிராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகின்றன. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி திருப்பதி உண்டியலிலேயே திருட்டு நடந்துள்ளது.. ஸ்ரீவாரி உண்டியலிலிலிருந்து ஒருவர் ரூ.15,000 பணத்தை திருடிய நபரை கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்திலும் கோயில் உண்டியலில் திருட்டு நடந்துள்ளது.. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்றாகும்..

சங்கரன்கோயில்: இங்கு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டு வருவார்கள்.. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் 20ம்தேதிக்கு பிறகு, கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கமாகும்.. இந்த உண்டியல் எண்ணும் பணி முழுவதும் அங்கு பொருத்தப்பட்டுள்ள வீடியோவிலும் பதிவு செய்யப்படும்.

அந்தவகையில், நேற்றைய தினம், சங்கரநாராயண சுவாமி கோயிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது..

கோயில் நிர்வாகம்: கோயிலுக்குள் உண்டியல் பணத்தை எண்ணும் பணிகளின்போது இந்த பெண்ககளும் அங்குதான் இருந்துள்ளார்கள்.. காணிக்கை எண்ணுவது தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த 4 பெண்கள் இந்த பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, போலீசாரும் உடனடியாக விரைந்து வந்து, சந்தேகத்திற்கிடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மகளிர் போலீசாரும், அந்த பெண்களிடம் தங்கள் விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அவர்கள் 4 பேருமே பணத்தை திருடியது அம்பலமானது.. இதில், மகேஸ்வரி என்ற 42 வயது பெண், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறாராம்.

4 பெண்கள்: சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோரும் இந்த உண்டியல் பணத்தை திருடியிருக்கிறார்கள்.. எல்லாரும் சேர்ந்து பணத்தை எண்ணும்போது, 17,710 ரூபாயை இவர்கள் திருடியதும் அம்பலமானது.. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குபதிந்து உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட ஏட்டு மகேஸ்வரி மற்றும் 3 பெண்களை கைது செய்தனர். இந்த சம்பவம் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+