கணவன், மாமியாரின் கொடுமை.. வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை
தூத்துக்குடி: வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவன், மாமியாரின் செயல்களால் மனம் வெதும்பி போன இளம் பெண், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவிட்டு விட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி கோவில்பட்டி சுபா நகர் சுதர்சன் கார்டனைச் சேர்ந்தவர் சுஜா வயது 29. சுஜாவுக்கும் விருதுநகர் மாவட்டம் மணிப்பாறைப்பட்டியைச் சேர்ந்த 31 வயதான வீரராகவனுக்கும் 2019ம் ஆண்டு கல்யாணம் நடந்தது.
வீரராகவன், கோவில்பட்டி ஆர்.ஆர். நகரில் ஆட்டோ மொபைல் ஷோரூம் வைத்திருக்கிறார். இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது இந்த நிலையில், வீரராகவனின் தம்பி கார்த்திக் என்பவருக்கு, சுஜாவின் தங்கையை பெண் கேட்டிருக்கிறார்கள்.

உறவினர்கள் கொடுமை
ஆனால் சுஜாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் வீரராகவன், அவரது பெற்றோர் கந்தசாமி - அமுதா தம்பதி குடும்பத்தினர் சுஜாவை டார்ச்சர் செய் தொடங்கியுள்ளனர். வீரராகவன் குடும்பத்தை தாண்டி, சாத்தூரில் வசிக்கும் வீரராகவனின் சித்தி திலகா உள்ளிட்ட சில உறவினர்களும் சுஜாவிற்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

பெற்றோர் ஆறுதல்
சுஜாவிடம் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என்று கேட்டு கொடுமைப்படுத்தியதாக சொல்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த சுஜா கடைசியில் பெற்றோரிடம் கூறியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்தலாம் என பெற்றோர் ஆறுதல் கூறியிருந்தார்கள்.

வாக்குவாதம்
ஆனாலும் நாளுக்குநாள் சித்ரவதை அதிகரித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தனது குழந்தையுடன் சுஜா, பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். புதன்கிழமை இரவு கணவனுடன் சுஜா செல்போனில் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

வீடியோ பதிவு
இறுதியில் விரக்தி அடைந்த சுஜா, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவிட்டு விட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications