இரண்டாவது சுதந்திர போராட்டம் என்ற உணர்வோடு.. தேர்தலில் வாக்களிக்க வேண்டும்! கனிமொழி வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்று மாலையுடன் பிரசாரங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், தூத்துக்குடியில் தீவிர பரப்புரை மேற்கொண்ட கனிமொழி, இரண்டாவது சுதந்திர போராட்டம் என்ற உணர்வோடு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பேசியதாவது, "நமக்கு என்று ஒரு ஜனநாயக கடமை உள்ளது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற, போராடி ஏராளமானோர் உயிரிழந்திருப்பது நமக்கு தெரியும். ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் விடுதலை வாங்கி இருக்கிறோம். இன்னைக்கும் மறுபடியும் ஒரு அடக்குமுறை ஆட்சி ஒன்றியத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

Kanimozhi appeals to vote in the elections with the spirit of the second freedom struggle

பாஜக ஆட்சியில் போராடக்கூடிய உரிமை மக்களுக்கு கிடையாது. அரசாங்கத்தை குற்றம் சொல்ல கூடிய உரிமை பத்திரிக்கை ஊடகத்திற்கு கிடையாது. எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியில் இருக்க கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது. யார் இதைச் சொன்னாலும் சிறைக்குதான் அனுப்பப்படுகிறார்கள். இரண்டு முதலமைச்சர்கள் இன்னைக்கு சிறையில் இருக்கிறார்கள். ஒரு துணை முதலமைச்சர் நிறைய எதிர்க்கட்சித் தலைவர்கள் இவர்களெல்லாம் மோடி பக்கம் போய் விட்டால் சுத்தமாய் விடுகிறார்கள். எதிர்த்து நின்றால் சிறைச்சாலை.

வரக்கூடிய தேர்தல் மோடிக்கு அதிமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியும். ஆனா, போய் ஓட்டு போடணும். வெயிலுக்கு அப்புறம் போகலாம், ஒரு நாள்தானே லீவு என்று வீட்டில் உட்கார்ந்து விடக்கூடாது. நீங்க போறது மட்டுமல்ல உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மற்றவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். பக்கத்து வீடு, அடுத்த வீட்டில் உட்கார்ந்தவர்களையும் ஓட்டு போட வைக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு என்று ஒரு ஜனநாயக கடமை உள்ளது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

மோடி வரமாட்டார், திரும்ப வரவே மாட்டார். வந்துட்டா.. இதுதான் நம்முடைய கடைசித் தேர்தல். அவர் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது சர்வாதிகாரம் மட்டும்தான் இந்த நாட்டில் மிஞ்சும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மன்னர் ஆட்சி கூட கிடையாது.. சர்வாதிகார ஆட்சி தான்! அவரு வச்சது மட்டும்தான் சட்டம் என்று சொல்லக்கூடிய நிலை உருவாகும். மோடி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளிள் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

ஆனால் நம்முடைய முதலமைச்சர் மக்களுக்கான திட்டங்களை, வாக்குறுதிகளை நிறைவேற்றி தரக்கூடியவர். மோடி நமக்கு செய்யாத நமக்கான திட்டங்களை செய்யக்கூடிய முதலமைச்சர் நமது முதலமைச்சர். ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை கொடுக்கிறேன் சொன்னார், இன்னைக்கு ஒரு கோடி 15 லட்சம் சகோதரிகளுக்கு தமிழ்நாட்டில் உரிமை தொகை வழங்கப்பட்டிருக்கிறது. சில பேருக்கு விடுபட்டுள்ளது அவர்களுக்கு தேர்தல் முடிந்த பின்பு இன்னொரு முகாம் அமைக்கப்பட்டு கொடுக்கப்படும்.

அதே போன்று, கேஸ் சிலிண்டர் மானியம் கொடுக்கிறேன் என்று மோடி கூறினார். கொடுக்கவில்லை, இன்னைக்கு கேஸ் சிலிண்டர் விலை 1200. நமது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலை 500 ரூபாய், பெட்ரோல் 75 ரூபாய் என குறைக்கப்படும். டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும். அதேபோல் உங்க பேங்க் அக்கவுண்ட்ல காசு கம்மியான பிடித்து விடுகிறார்கள் அது நிறுத்தப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு தங்க நகை விலையை குறைக்க முயற்சிப்போம்.

ஏழ்மையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு, ஏழ்மையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் தொடர்ந்து பாஜக மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகிறார்கள். அதிகாரத்தை, சர்வாதிகாரமாக மாற்ற அத்தனை முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் கடமை. நமது முதலமைச்சர் செல்வது போல் இரண்டாவது சுதந்திர போராட்டம் என்ற உணர்வோடு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என உங்களை எல்லாம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+