தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னைக்கு ஒரு புடி! எல்லோரும் வாங்க! ஓலைப்புட்டு -இலங்கை தமிழர் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்ட கனிமொழி!

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'ஓலைப்புட்டு' என்ற இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை ருசித்து பார்க்க விரும்புவோர் இனி இலங்கை செல்ல வேண்டியதில்லை, தூத்துக்குடிக்கு சென்றாலே போதுமானது.

அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

“டபுள் மீனிங்”.. பாஜகவில் 4 நடிகைகள்.. திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி “டபுள் மீனிங்”.. பாஜகவில் 4 நடிகைகள்.. திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி

இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அண்மையில் கூட இலங்கைத் தமிழர்களுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 321 தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்தது. அடுத்ததாக விழுப்புரம் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தொகுப்பு வீடுகளை கட்டவுள்ளது. இந்நிலையில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் சார்பில் தூத்துக்குடியில் உணவகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

 ஓலைப்புட்டு

ஓலைப்புட்டு

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மிகுந்த ஆதரவாக நின்றார். தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் 'ஓலைப்புட்டு' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் பாரம்பரிய உணவகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்ததுடன் இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்தார்.

போதும் போதும்

போதும் போதும்

கனிமொழி எம்.பி. போதும் போதும் என்று கூறியும் தங்கள் கைப்பக்குவத்தை ருசித்து பார்த்து சொல்லுமாறு இலங்கை தமிழர் பாரம்பரிய உணவு பண்டங்களை அவருக்கு கொடுத்தனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருந்த நிலையில், இதில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது, எப்படி தயாரிக்கப்பட்டது என்பது பற்றியும் ஆர்வமுடன் கனிமொழியிடம் அவர்கள் விளக்கிக் கூறினர். கனிமொழி எம்.பியுடன் அமைச்சர் கீதாஜீவனும் இந்த உணவுப் பண்டங்களை ருசித்துப் பார்த்தார்.

 இலங்கை செல்லத் தேவையில்லை

இலங்கை செல்லத் தேவையில்லை

இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை ருசித்து பார்க்க விரும்புவோர் இனி இலங்கை செல்ல வேண்டியதில்லை, தூத்துக்குடிக்கு சென்றாலே போதுமானது என்ற நிலையில் அங்கு பல்வேறு வகையான இலங்கைத் தமிழர் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

English summary
MP Kanimozhi opened a Sri Lankan Tamil traditional restaurant called 'Olaiputtu' which has been started by the Sri Lankan Tamils Rehabilitation Camp in Thoothukudi Municipal Corporation Complex.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X