தூத்துக்குடியில் மீண்டும் போட்டி? அண்ணன் கையில் தான் முடிவு! கனிமொழி பளிச் பதில்!
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் எடுக்கும் முடிவை பொறுத்து என பளிச் பதிலளித்தார் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீனவர் நலத்துறை சார்பில் இன்று பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் முற்றும் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்தினார்.

பாராட்டு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது, ''கருத்தை யார் வேண்டுமென்றாலும் தெரிவிக்கலாம் தவறு இல்லை, அது எவ்வளவு காட்டமான கருத்தாக இருந்தாலும் முன் வைக்கலாம். அது அரசியலில் ஒரு சாதாரண விஷயம். ஆனால் அதை எப்படிச் சொல்கிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அடிப்படை நாகரிகம் தாண்டி செல்லக்கூடாது என்பதைத் தான் நான் சொல்கிறேன்.''
''மேலும், டெல்லியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும், திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ அதைப் பொறுத்து தான் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரிய வரும்.'' என கனிமொழி கூறினார். ஒரே வார்த்தையில் பளிச்சென்று பதிலளித்து தனது அடக்கக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கனிமொழி நினைத்திருந்தால் அந்தக் கேள்விக்கு என்ன வேண்டுமானாலும் பதில் அளித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் அண்ணன் கையில் தான் முடிவு, அவர் எடுக்கும் முடிவை பொறுத்து என யாரும் எதிர்பாராத பதிலை அளித்துள்ளார். அரசியலில் ஒருவரது நிலை உயர உயர அவரிடம் இருக்க வேண்டிய பண்புகளில் பணிவு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications