நெகிழ வைத்த கனிமொழி.. அரசு பள்ளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்ற அழைத்து சென்ற இடத்தை பாருங்க! செம

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள அரசு மாடல் பள்ளி மாணவ-மாணவிகள் கேட்டு கொண்டதன் பேரில் அவர்களின் ஆசையை திமுகவை சேர்ந்த கனிமொழி எம்பி நிறைவேற்றிய வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தூத்துக்குடி லோக்சபா தொகுதி எம்பியாக மீண்டும் திமுகவின் கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். மேலும் தூத்துக்குடி மட்டுமின்றி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திமுக கட்சியை வளர்த்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

kanimozhi tuticorin adichanallur

இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்பி பங்கேற்று வருகிறார். அதேபோல் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கனிமொழி எம்பி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் கனிமொழி எம்பி தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் அரசு மாடல் பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மாணவ - மாணவிகள் கனிமொழி எம்பியிடம் ஒரு கோரிக்கை வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடக்கும் இடத்துக்கு தங்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினர். அதனை கேட்ட கனிமொழி எம்பி அழைத்து செல்வதாக உறுதியளித்து திரும்பினார்.

இதையடுத்து சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், மாணவ-மாணவிகளின் ஆசையை ஈடேற்றும் வகையிலும் கனிமொழி எம்பி இன்று தூத்துக்குடி அரசு மாடல் பள்ளி மாணவ-மாணவிகளை ஆதிச்சநல்லூரில் அழாய்வு நடக்கும் இடத்துக்கு அழைத்து சென்று காண்பித்தார். மாணவ-மாணவிகளுடன் கனிமொழி எம்பி, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உடனிருந்தனர். மாணவ-மாணவிகள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு இடத்தில் உள்ள பழங்கால பொருட்களை நேரில் பார்த்து அதுபற்றி கேட்டறிந்து கொண்டனர்.

இதுபற்றி தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறுகையில், ‛‛தூத்துக்கடி அரசு மாடல் பள்ளிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்கள், மாணவிகள் வந்து ஆதிச்சநல்லூர் பார்க்க வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம், மாவட்ட கல்வித்துறை அதிகாரி, கலெக்டர், நான் என அனைவரும் சேர்ந்து இன்று அவர்களை அழைத்து வந்துள்ளோம். அகழாய்வு துறையை சேர்ந்தவர்கள் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்'' என்றார்.

இதுபற்றி மாணவ-மாணவிகள் கூறுகையில், ‛‛நாங்கள் ஆதிச்சநல்லூர் அகழாய்வு இடத்தை பார்க்க வேண்டும் என்று கனிமொழி எம்பியிடம் தெரிவித்தோம். அவர் எங்களை இங்கு அழைத்து வந்தார். முதுமக்கள் தாழிகளை நேரில் பார்த்தோம். முதுமக்கள் தாழி பற்றி புத்தகத்தில் பார்த்துள்ளோம், படித்துள்ளோம். நேரில் பார்த்தது இல்லை. ஆனால் இறந்தவர்களுக்கான முதுமக்கள் தாழியை நேரில் பார்த்தோம். கருப்பு சிவப்பு பானையை பற்றி தெரிந்து கொண்டோம்'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+