பாழடைந்த 50 ஆண்டுகால பள்ளிக் கட்டிடம்... கிடப்பில் போடப்பட்ட மனுக்கள்... தூசி தட்டிய கனிமொழி..!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 50 ஆண்டுகால பழமையான பள்ளி ஒன்று முற்றிலும் சிதலமடைந்ததால், புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுத்துள்ளார் கனிமொழி எம்.பி.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது, பள்ளிக்கட்டிடத்தின் நிலையை சுட்டிக்காட்டி அப்போதைய அமைச்சர் செங்கோட்டையனுக்கு பல முறை புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் கனிமொழி எம்.பி.யின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, விறுவிறுவென நடவடிக்கையை தொடங்கிய அவர் இன்று புதிய பள்ளிக்கட்டிடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டியுள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி சிதம்பரம் நகர் ஆட்டோ காலனியில் அரசு நிதி உதவி பெறும் கல்விக் கழக நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 50 ஆண்டுகால பழமையான கட்டிடம் என்பதால் பள்ளியின் மேற்கூரைகளும், சுவர்களும் சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பள்ளியின் கொடிக்கம்பம் அமைந்துள்ள மைதானத்தில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.

புகார் மனு
இது குறித்த புகார்மனுக்கள் மீது முந்தைய ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இப்போதாவது தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி.யை சந்தித்து முறையிட்டுள்ளனர் பெற்றோர். பள்ளிக்கூட விவகாரம் என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய கனிமொழி மாவட்ட நிர்வாகம் மூலம் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர முயற்சிகளை மேற்கொண்டார்.

முயற்சிக்கு பலன்
அந்த முயற்சியின் பயனாக பாழடைந்த பள்ளிக்கட்டிடத்துக்கு பதில் புதிய கட்டிடம் கட்டித்தருவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கனிமொழி, மீண்டும் பள்ளி திறக்கப்படுவதற்குள் கட்டிடப் பணிகளை முடிக்குமாறும், மைதானத்தில் இனி மழைநீர் தேங்கி நிற்காதவாறு உரிய மாற்றுவழிகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பள்ளிக்கல்வித்துறை
தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தூத்துக்குடி சிதம்பரம் நகர் ஆட்டோ காலனி பொதுமக்கள் கனிமொழியை சூழ்ந்து நின்று நன்றி தெரிவித்துக்கொண்டனர். அவர்களிடம் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த கனிமொழி, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளையும், கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களையும் விளக்கிக்கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications