விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்! தமிழக அரசின் காசோலையை வழங்கிய கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு தமிழக் அரசு வழங்கிய ரூ.1 கோடிக்கான நிவாரணத் தொகை காசோலையை கனிமொழி எம்.பி. இன்று நேரில் வழங்கினார்.

விஏஓ லூர்து பிரான்சிஸ் மனைவிக்கு ஆறுதலும், கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையும் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதியையும் கனிமொழி அவரிடம் அளித்தார்.

Kanimozhi MP presented a compensation cheque of Rs 1 crore given by the Tamil Government to the family of VAO Lourde Francis

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியிலிருந்த போது கொலை செய்யப்பட்டு மரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்க ஆணையிட்டிருந்தார் முதல்வர்.

தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது என ஸ்டாலின் தனது இரங்கலில் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணத் தொகை அறிவித்த ஒரே வாரத்தில் அதற்கான காசோலை வேகமாக தயார் செய்யப்பட்டு இன்று முறைப்படி லூர்து பிரான்சிஸ் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டன.

Kanimozhi MP presented a compensation cheque of Rs 1 crore given by the Tamil Government to the family of VAO Lourde Francis

அதேபோல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தப்படி கொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்தில் ஒருவருக்கு விரைவில் அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து இதற்கான பணி ஆனையை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வழங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலையாளிகளை சும்மா விடக் கூடாது என லூர்து பிரான்சிஸ் உறவினர்கள் கனிமொழியிடமும், அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனிடமும் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+