+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவியின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் செய்ய வந்த திமுக எம்பி கனிமொழியை ஊர்மக்களும், உறவினர்களும் சூழ்ந்து கொண்டு ஆவேசமாக கேள்விகளை எழுப்பினர். 2 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம்.. அப்போது வராமல் 2 நாட்கள் கழித்து வந்தது ஏன் என்றும் கேட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 3 நாட்களுக்கு முன்பாக மாலை 7 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 17 வயது மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற போது, அலட்சியப்படுத்தி இருக்கின்றனர். இதன்பின் ஊர் மக்களும், உறவினர்களும் தேடிய போது நேற்று முன்தினம் ஒரு முட்புதரில் மாணவியின் உடல் கிடைத்தது.

Kanimozhi

17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நீதி கேட்டு மாணவியின் உறவினர்களும், ஊர் மக்களும் போராடி வந்தனர். இதையடுத்து சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளும் எழுந்தன. தொடர்ந்து வழக்கு தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது கனிமொழியை சூழ்ந்து கொண்ட உறவினர்கள், நேற்று ஏன் நீங்கள் வரவில்லை.. கனிமொழியை சுற்றிவளைத்த ஊர்மக்கள் 2 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம்.. உடனடியாக வராமல் 2 நாட்கள் கழித்து வந்தது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அனைவரையும் சமாதானம் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை கனிமொழி சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இளம் மாணவிக்கு மிகப்பெரிய கொடுமை நடந்துள்ளது. ஏடிஎஸ்பி தலைமையில் 4 டிஎஸ்பி, 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை விரைவில் பிடிக்க அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். முதல்வரும் தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறார். அதேபோல் மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதனால் குற்றவாளிகள் நிச்சயமாக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். கனிமொழியை சூழ்ந்து கொண்டு ஊர்மக்கள் பேசும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+