Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kulasai Dasara: குலசேகரன்பட்டினத்தில் களைகட்டும் தசரா திருவிழா.. நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பம்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குலசை தசரா திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. இன்று 7 ஆம் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், இன்று இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வருகிறார். தற்போது தசரா குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளதால் குலசை சுற்றுவட்டார பகுதிகள் களை கட்டியுள்ளது. சுற்றிலும் உள்ள ஊர்களில் திரும்பும் திசையெல்லாம் வண்ணவிளக்குகள், அலங்கார லைட்கள் கட்டி, சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவு ஊர்களில் திருவிழா களைகட்டியுள்ளது.

இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

kulasai-dasara-festival-heats-up-cultural-performances-start-tomorrow-in-tuticorin

இன்று 7 ஆம் திருநாள்

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பல்வேறு கோலங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 5 ஆம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 ஆம் திருவிழாவான அன்று திருவிழா களை கட்டத் தொடங்கியது. வேடமணியும் தசரா குழுவினர் காலை முதலே வரத் தொடங்கினர்.

அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக்கொண்டனர். இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7 ஆம் திருவிழாவான இன்று இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வருகிறார்.

கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ்

இன்று முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடமணிந்து ஊர் ஊராக சென்று மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

மேலும் காணிக்கைகளை வசூலித்து கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் வரும் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.

கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது

தற்போது தசரா குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளதால் குலசை சுற்றுவட்டார பகுதிகள் களை கட்டியுள்ளது. சுற்றிலும் உள்ள ஊர்களில் திரும்பும் திசையெல்லாம் வண்ணவிளக்குகள், அலங்கார லைட்கள் கட்டி, சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவு ஊர்களில் திருவிழா களை கட்டியுள்ளது.

தசரா திருவிழாவையொட்டி கடந்த 22 ஆம் தேதி முதல் அரசு பஸ்கள் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்துசெல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் இறக்கிவிடப்படுகின்றனர். உடன்குடி உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்தாலும் புறவழிச்சாலையில் இறக்கிவிடப்படுகிறார்கள்.

போக்குவரத்து மாற்றம்

இதனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே புறவழிச்சாலையில் பக்தர்களுக்கான நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. உடன்குடி செல்லும் சாலை சந்திப்பில் நின்றுகொண்டே பயணிகள் பேருந்துகளில் ஏறுவதை பார்க்க முடிகிறது. இதனால், போதிய வசதிகள் செய்து தரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+