குலசை முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கை.. அரை கோடியை நெருங்கியது! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அந்த வகையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக மட்டும் சுமார் அரை கோடி ரூபாய் போட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் 125.500 கிராம் தங்கமும், 1 கிலோ 100 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். நாட்டிலேயே மைசூருக்கு அடுத்ததாக இங்கு தான் தசரா விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

குலசை முத்தாரம்மன் கோவில்
மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த குலசை தசரா விழாவிற்கு உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த பத்து நாட்களும் தூத்துக்குடி குலசை பகுதி களை கட்டும். தெருக்கள், வீதிகள் எங்கும் விழா கொண்டாட்டமாக நடைபெறும். காணும் இடமெல்லாம் அன்னதானமும் நடைபெறும்.
விழாவில் திருக்காப்பு கட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து மக்களிடம் காணிக்கை பெற்று, கோவிலில் அதை நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். அந்த வகையில் தான் கடந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த அக்டோப்ர் மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.
அரை கோடியை நெருங்கிய உண்டியல் காணிக்கை
உள்ளூர், வெளியூர் என பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து அம்மனை வழிபட்டனர். ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கைகளும் வசூலிக்கப்பட்டது. இவ்வாறாக மொத்தம் 12 நாட்கள் தசரா விழா கொண்டாட்டத்தோடு நடந்து முடிந்தது. இந்த நிலையில் தான் குலசை முத்தாரம்மன் கோவில் உண்டியல் காணிக்கை அரை கோடி ரூபாயை நெருங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
குலசை முத்தாரம்மன் கோவிலில் மொத்தம் 18 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தான் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. உள்ளது. இதன் காரணமாக மாதந்தோறும் கோயிலில் உள்ள உண்டியல்களில் காணிக்கையினை எண்ணும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியானது நடந்தது.
1 கிலோ வெள்ளி, 125 கிராம் தங்கம்
சங்கரன்கோவில் சங்கரநயினார் கோவில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் இந்த காணிக்கைகள் எண்ணும் பணியானது நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் உட்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் மட்டும் அரை கோடியை நெருங்கியது.
அதாவது ரூ.48 லடத்து 80 ஆயிரத்து 142 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். ரூபாய் நோட்டுகள், சில்லறைகள் போக தங்கம் மற்றும் வெள்ளியாகவும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளார்கள். இதன்படி தங்கம் மட்டும் 125.50 கிராம் செலுத்தியுள்ளனர். வெள்ளி மட்டும் 1 கிலோ 100 கிராம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications