குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா! நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் (குலசை) முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை (செப்டம்பர் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். இந்த திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

அதாவது மைசூருக்கு அடுத்து இங்குதான் தசரா விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விரதம் இருந்து பல்வேறு வேடங்களை போட்டு அம்மனை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது (Kulasai Dasara Dodiyetram 2025 date). இதை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு காளி பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும் இரவு 7 மணிக்கு மெல்லிசையும் நடைபெறும்.
நாளை அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடக்கும். காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படும். பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடக்கும். இதையடுத்து பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்வர்.
காப்பு கட்டிய பக்தர்கள் நேர்த்திக் கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து 10 ஆம் நாளில் கோயிலில் அந்த காணிக்கையை செலுத்துவார்கள். இந்த விழா தொடர்ந்து 12 நாட்களுக்கு நடைபெறும்.
இதையொட்டி தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
முதல் நாள் இரவில், அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2ஆம் நாள் இரவில் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்திலும் 3ஆம் நாள் இரவில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும் 4ஆம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும் அம்பிகை எழுந்தருள்வார்.
5ஆம் நாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6ஆம் நாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும் 7ஆம் நாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும் 8ஆம் நாள் இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும் 9ஆம் நாள் இரவு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும், 10 ஆம் நாள் மகிஷனை சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கும்.
11 ஆம் நாள், மாலை அம்மன் வீதி உலா வருவார். அப்போது பக்தர்கள் காப்புகளை களைத்து விரதத்தை முடித்துக் கொள்வார்கள். கடைசி நாளான 12 ஆம் நாள், அதாவது அக்டோபர் 4ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும் (Kulasai Dasara Date 2025).
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications