பாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்!
தூத்துக்குடி: ஒரே பாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அதிமுக அரசு இருக்கு.. ஏதாவது கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம் தர மத்திய அரசு தயாரா இருக்கு.." என்று காங்கிரஸ் பிரமுகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
நாங்குநேரியில் பிரச்சாரம் களை கட்டிக்கொண்டு இருக்கிறது. அது காங்கிரஸ் மண் என்பதாலோ என்னவோ, எல்லா காங்கிரஸ் தலைகளின் நடமாட்டத்தையும் அங்கே தினமும் காண முடிகிறது.
இதில், மகிளா காங்கிரஸின் தேசியச் செயலாளர் குஷ்புவும் பிரசாரத்தில் கலந்து கொண்டு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் குஷ்பு பேசும்போது மத்திய, மாநில அரசுகள் குறித்து விமர்சித்தார்.

அதிமுக அரசு
"தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. தினமும் எங்காவது ஒரு இடத்தில், பாலியல் துன்புறுத்தல் இருந்துக்கிட்டேதான் இருக்கு.. இது தினமும் நியூஸ் பேப்பர்களில் வருவதை நாம பார்த்துட்டுதான் இருக்கோம்.

தேச துரோகி
சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து போய்விட்டது. அதனால அரசை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்டால் அவர்களுக்கு எதிராக தேசத்துரோகி என்று பட்டம் தர்றதுக்கு மத்திய அரசு தயாராக இருக்கு. அந்த அளவுக்கு மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கிறது.
|
விவரம் இல்லை
தொழில்ரீதியான வளர்ச்சிகளும் எதுவுமே இல்லை. கேட்டால் அதிமுக அரசுக்கு கடன் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் அரசின் கடன் மட்டுமே அதிகமாகி கொண்டே போகிறது. அப்படின்னா, கடனில் கிடைக்கிற பணம் எங்கே போகிறது என்ற விபரமும் இல்லை. அது சம்பந்தமா வெள்ளை அறிக்கையை அரசும் வெளியிடவில்லை.

திமுக அரசு
ஏதாவது புதுசா சாதனைகளை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க அதிமுகவால் முடியவில்லை. ஆனா, இதுவே திமுகவால், முந்தைய சாதனைகளை வாக்கு கேட்க முடியும். இந்த இடைத்தேர்தலில் அதிமுக பணத்தை மட்டுமே தண்ணீராக செலவழித்து வருகிறது. இப்படி பணத்தை கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம்ன்னு நினைக்கிறாங்க.

அராஜகங்கள்
ஆனா, ஆட்சியாளர்களை பார்த்து கேள்வி கேட்கும் நிலைக்கு நம் மக்கள் வந்துவிட்டனர்.. வளர்ந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்றால், அதிமுக ஆட்சியில் செய்த அராஜகங்கள்தான்" என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications