நில அளவீடு, பத்திரம் ஆவணம்.. சிக்கிய தூத்துக்குடி, ராமநாதபுரம் அரசு அதிகாரிகள்? யாரந்த சார் பதிவாளர்
தூத்துக்குடி: ராமநாதபுரத்தில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, தூத்துக்குடியில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
அரசு அலுவலகங்களில் சமீபகாலமாகவே லஞ்ச லாவண்யங்கள் தலைவிரித்தாடுகின்றன.. அதிகமாக பணம் புழங்கக்கூடிய வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் இதுபோன்ற லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன.

சாதி சான்றிதழ், பட்டா, நிலம் அளவீடு
சாதி சான்றிதழ், பட்டா வழங்குவது, நிலம் அளவீடு, உதவித்தொகை என எண்ணற்ற உதவிகளை கோரி, விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்றால், அவர்களிடம் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார்களை தந்துவிடுகிறார்கள். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் கையும் களவுமாக சிக்கினால், அவர்களை அப்போதே அதிகாரிகள் கைது செய்கிறார்கள். இதில் விஏஓ, தாசில்தார், என பெண் அதிகாரிகளும் அடக்கம் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
அரசு அதிகாரிகள் மீது புகார்கள்
இதுபோல அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால், புகார்கள் வரும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடிக்கடி திடீர் சோதனை நடத்துவது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில், ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் ( தரக்கட்டுப்பாட்டு பிரிவு) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீரென சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது, கணக்கில் வராத பணம் ரூ.5.60 லட்சம் சிக்கியது. இது தொடர்பாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி - ஆவணங்கள் சிக்கியது
அதேபோல, தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர்.. அதிக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
இதில், கணக்கில் வராத ரூ.3,63,000 கைப்பற்றப்பட்டது. மாவட்ட பதிவாளர் (தணிக்கை) சதாசிவம், புதுக்கோட்டை சார் பதிவாளர் செல்வகுமார் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.. மேலும், இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.. எனவே, பறிமுதல் செய்யப்பட்டு, பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications