திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை அருகே.. தீக்குளித்த நபர்.. அதிர்ந்த பக்தர்கள்.. என்ன நடந்தது
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை பகுதியில் இன்று நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த நபர் திடீரென தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அந்த நபர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கடலில் குளித்துவிட்டு முருகனை வழிபட்டு வருகிறார்கள். தற்போது வைகாசி விசாக திருவிழா நடந்து வருவதாலும், பள்ளி விடுமுறை என்பதாலும், இங்கு ஏராளமானவர்கள் குவிந்து வருகிறார்கள்.

பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் இங்கு குவிந்து வருகிறார்கள். இதனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று கடற்கரையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்து பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில், உடலில் தீ பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அவர் கத்தினார். அருகில் இருந்தவர்களும் இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த நபர் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 95 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் தீக்குளித்த நபர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த மாதவன் என்பது தெரியவந்தது. எதற்காக உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கடற்கரையில் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications