தூத்துக்குடியில் மினி டைடல் பார்க்.. திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! சிறப்புகள் என்ன?
தூத்துக்குடி: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்துள்ளார். இதேபோல் தூத்துக்குடியில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி பயணம் மேற்கொண்டார். இன்று மாலை விமானத்தில் தூத்துக்குடி சென்ற முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடியில் புதிய மினி டைடல் பூங்காவை திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து நாளை தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்காக இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் புதிய தொழில்களுக்கான முதலீடுகளை ஈர்த்து வருகிறார்கள். இதுவரை ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் பயனாக, ஏறத்தாழ 31 இலட்சம் இளைஞர்கள் புதிய வேலை வாய்ப்புகள் பெறும் நிலை உருவாகியுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தகவல் தொழில் நுட்பத் தொழில்களைப் பெருக்கும் நோக்கத்துடன் இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய டைடல் பூங்காவினை கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 4ஆம் நாள், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களை அழைத்துத் திறந்து வைத்தார்கள்.
மினி டைடல் பூங்கா
அதனைத் தொடர்ந்து, உலகின் புகழ் வாய்ந்த முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தகவல் தொழில் நுட்பத் தொழில் வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் தகவல் தொழில் நுட்பத் தொழில்கள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் விழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்களையும் உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றுள் விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம். விளாங்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்கா. திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தமிழ்நாடு அரசுக் கட்டடங்களில் மிக அளவில் 21 தளங்களுடன் கூடிய மாபெரும் டைடல் பூங்கா ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மினி டைடல் பார்க்
இவற்றைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் 63,000 சதுர அடி பரப்பில் தரைத் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பூங்காவினை முதல்வர் ஸ்டாலின் இன்று 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு திறந்து வைத்துள்ளார். இப்பூங்காவானது, வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சிக்கூடம், கலையரங்கம். தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
ஏறத்தாழ, 32 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் குறிப்பாக தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மினி டைடல் பூங்கா மேலும் ஒரு மைல் கல் திட்டமாக வடிவெடுத்துள்ளது.
புதுமைப் பெண் திட்டம்
இதேபோல் தூத்துக்குடியில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 75,028 மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். புதுமைப் பெண் திட்டம் 5.9.2022 அன்று வடசென்னை பாரதி மகளிர் கல்லூரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இத்திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக, மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.
-
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications