தூத்துக்குடி எட்டயபுரத்தில் ஆணவக் கொலை? காதல் திருமணம் செய்த.. புதுமண தம்பதி கொடூரமாக வெட்டி படுகொலை
தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். 28 வயதான இவர், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவரது தாய்மாமா முத்துக்குட்டி என்பவர் மகள் ரேஷ்மா (20). இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர்.

ஏற்கவில்லை
இருப்பினும், இவர்கள் காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. உறவினர் என்றாலும் கூட மாணிக்கராஜை ரேஷ்மாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பை தாண்டி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சில மாதங்களாக அவர்கள் வெளியூரில் தங்கி இருந்தாக கூறப்படுகிறது.

படுகொலை
திருமணம் ஆகி கொஞ்சக் காலம் ஆகிவிட்டதால், பெற்றோரின் கோபம் குறைந்து இருக்கும் எனக் கருதி இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் ஊருக்குத் திரும்பி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணிக்கராஜும் அவரது காதல் மனைவி ரேஷ்மாவும் இன்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருவரும் தனியாக இருக்கும் நேரம் பார்த்து நுழைந்த மர்ம நபர்கள், இருவரையும் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில் இருவருமே அப்படியே ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில்
இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த எட்டயபுரம் போலீசார், உடலைக் கைப்பற்றிய உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

போலீசார் விசாரணை
முதற்கட்டமாக இந்த இரட்டை கொலை தொடர்பாக ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி சொந்த ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications