ஸ்டெர்லைட் தீர்ப்பு... வைகோவுக்கு எந்த சம்பந்தமும் இல்லைங்க... சொல்கிறார் அமைச்சர் கருப்பணன்
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தீர்ப்புக்கும் வைகோவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கே.சி கருப்பணன் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்தும், சம்பந்தப்படட வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யும் அதிகாரம் பசுமை தீர்ப்பாயத்துக்கு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் எனக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடியில் பலவேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான பூமி பூஜையில் அமைச்சர் கே.சி கருப்பணன் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத் திறமையே தீர்ப்பு சாதகமாக வந்ததற்குக் காரணம் என்றார். மேலும், வைகோவுக்கும், ஸ்டெர்லைட் தீர்ப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறினார்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான அரசாணை குறித்து பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசாணையானது அரசின் உச்சபட்ச அதிகாரம் என்று கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சிலர் மக்களை திசை திருப்புவதாக தெரிவித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications