தை முடிய போகுது! வழி எங்கே? எந்த பக்கம் போக திட்டம்! வந்து விழுந்த கேள்வி! ஓபிஎஸ் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சொன்ன முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தற்போது அரசியலில் தனித்து விடப்பட்டுள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறிய அவர் யாருடன் கூட்டணி செல்வது என்று தெரியாமல் திணறி வருகிறார். தை மாதமும் முடிய இருக்கும் நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் திணறிவருவதாக சொல்லப்பட்டு வருகிறது. அதிமுகவை கைப்பற்றுவவேன் என்று சொல்லி வந்த ஓ பன்னீர் செல்வம் அணியில் இருந்த முக்கிய தலைவர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் ஐக்கியமாகினர்.

O Panneerselvam Visits Tiruchendur Murugan Temple Amid Political Uncertainty Over Future Alliances

தனித்து விடப்பட்ட ஓ பன்னீர் செல்வம்

அதிமுகவில் எடப்பாடியுடனான மோதலுக்கு தொடக்கப்புள்ளியாக இருந்தது ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர் தர்மருக்கு ராஜ்யசபா சீட் கேட்டதுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த தர்மரே தற்போது எடப்பாடி பக்கம் ஐக்கியமாகியுள்ளார். ஒட்டுமொத்த கூடாரமும் காலியாகிவிட்ட நிலையில், அதிமுகவில் இணையவும் தயார் என்று கூறினார்.

இது குறித்து அண்ணண் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஓ பன்னீர் செல்வம் பேசியிருந்தார். ஆனால், ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். தேசிய ஜனநாயக கட்சியில் சேர்க்க தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை..

அதிமுகவில் ஓபிஎஸை சேர்க்க முடியாது

ஆனால் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துவிட்டதகவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டது. ஓ பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை கட்சி ஆரம்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றே சொல்லப்படுகிறது.

தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ பன்னீர் செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்தால் தாமரை சின்னமோ அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னத்திலே போட்டியிடலாம். ஆனால் இதற்கு ஓ பன்னீர் செல்வம் தயக்கம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஓ பன்னீர் செல்வம் கூறினார். இதனால், தை பிறந்த பிறகு அவரது நிலைப்பாடு உறுதியாக தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தை பிறந்து 22 நாட்கள் ஆகியும் ஓ பன்னீர் செல்வம் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

அடுத்து என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்று தெரியாமல் இருந்து வரும் ஓபிஎஸ் தற்போது கோவில் கோவிலாக ஏறி இறங்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் தனது குல தெய்வமான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வன பேச்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது தனது அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

தொடர்ந்து நேற்று அவர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சணாமூர்த்தி சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வாசலில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அப்போது செய்தியாளர்கள் தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறினீர்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், "தை முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளன" என பதில் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+