திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தை சுற்றி இருந்த 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் அகற்றம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாழிக்கிணறு பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில் பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை வியாபாரங்கள், பச்சை குத்தும் இடங்கள், இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட கலைஞர்கள், புகைப்பட விற்பனையாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளது. இவற்றை கோயில் நிர்வாகம் அதிரடியாக அகற்றி உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பி கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாழிக்கிணறு பகுதி, முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில் பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை வியாபாரங்கள், பச்சை குத்தும் இடங்கள், இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட கலைஞர்கள், புகைப்பட விற்பனையாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் உள்ளது.

இங்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் இந்த வியாபாரிகள் தங்களின் குடும்பத்தை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக கூறி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்த வியாபாரிகள் மற்றும் கிரிபிரகார நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வந்தவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மேற்கொண்டிருக்கிறது.
இதற்காக கிரிபிரகார பகுதிகள், முறை வரிசைப் பகுதிகள் மற்றும் காத்திருப்போர் அறை பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் பூ வியாபாரிகள் பொம்மை வியாபாரிகள், வடை, பழ வியாபாரிகள் ஆகியோர் வியாபாரிகள் தானாகவே வெளியேறிச் செல்ல வேண்டும் என காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தினார்கள்.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், பல ஆண்டுகளாக கோவில் வளாகத்தை நம்பி அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் பூ வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் நிர்வாகத்திடமும், பாதுகாப்பு பணியாளர்களிடமும், கோவில் இணை ஆணையர் லோகநாதன் அவர்களிடமும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திய வியாபாரிகள், நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
எனினும் திருச்செந்தூர் கோவில் காவல் அதிகாரிகள், கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் முன்னிலையில் இந்த வியாபாரிகளை கோவில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். திடீரென கோவில் நிர்வாகத்தினர் சிறு வியாபாரிகள் வைத்த கடையை அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கூடிய கூட்டங்கள் தலையா? கடல் அலையா? கிருத்திகை முருகனை காண குவிந்த பக்தர்கள்! திணறுது திருச்செந்தூர் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து














Click it and Unblock the Notifications