முதல்வராக அல்ல.. அமைச்சராக கூட தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி.. கனிமொழி விளாசல்
தூத்துக்குடி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க பழனிச்சாமிக்கு தகுதியில்லை என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி ஆவேசமாக கூறியுள்ளார்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். வருகிற மே 23 ம் தேதிக்கு பிறகு தமிழக அரசியலின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

முதலமைச்சர் விமர்சனம்
மே 23 தேர்தல் முடிவுக்கு பிறகு, ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது எனவும் தோல்வி பயத்தால் தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாகவும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருந்தார்.

முதல்வர் குறித்து விமர்சனம்
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி பேசியதாவது: முதல்வராக அல்ல, அமைச்சராக கூட கனவு காண முடியாதவரையே முதல்வராக நாம் கொண்டுள்ளோம் என்றார்.

தகுதியில்லை
மேலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்க பழனிச்சாமிக்கு தகுதியில்லை என்று கூறிய கனிமொழி, விரைவில் ஸ்டாலின் முதல்வராவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர் குற்றச்சாட்டுகள்
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக குறிப்பிட்ட கனிமொழி, நாடு தழுவிய அளவில் தேர்தல் ஆணையம் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவசியம் கிடையாது
தங்கதமிழ்ச்செல்வன் மூலம் திமுக - அமமுக கூட்டு வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, திமுகவிற்கு யாருடனும் மறைமுகமாக கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கனிமொழி பதிலளித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications