இறந்தவருக்கு பட்டா தந்த விளாத்திகுளம்.. அதைவிடுங்க.. திண்டுக்கல் தெப்பம்பட்டிக்கு இலவச பட்டா.. குஷி
தூத்துக்குடி: பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அதிர்ச்சி சம்பவம் ஒன்று தூத்துக்குடியில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் வெளவால் தொத்தி கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள்.. இவர் கடந்த 2021ம் ஆண்டு, வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டார். அழகம்மாள் கணவர் ராஜகோபால் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார்.

இந்த தம்பதிக்கு அன்னலட்சுமி, சரஸ்வதி, கோப்பம்மாள் என 3 பெண்கள் இருக்கிறார்கள்.
அழகம்மாள் பெயரில் வெளவால் தொத்தி கிராமத்தில் சுமார் 0.73 ஏர் நிலம் உள்ளது... இந்த நிலத்தை வாரிசு உரிமைப்படி பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று அன்னலட்சுமி, ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.
அன்னலட்சுமி: இதற்கான புதிய பட்டா, விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் அன்னலட்சுமியிடம் வழங்கப்பட்டது. இந்த பட்டாவை பார்த்ததுமே அன்னலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.. காரணம், புதிதாக தரப்பட்ட அந்த பட்டாவானது, 3 வருடம் முன்பு இறந்துபோன தன்னுடைய அம்மா அழகம்மாளின் பெயரிலேயே இருந்தது. இதனால் பட்டா மாறுதல் பெற அன்னலட்சுமி மறுபடியும் விண்ணப்பிக்கும் நிலைமை வந்துள்ளது.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறும்போது, "அன்னலட்சுமியின் விண்ணப்பத்தில், தாய் அழகம்மாள் பெயரில் உள்ள 1.82 ஏக்கர் நிலத்தை அவரது வாரிசுகளான தங்களது பெயர்களின் பட்டா மாற்றம் செய்து தரும்படி கேட்டிருந்தார்.. அழகம்மாள் பெயரில் இருந்த பட்டா எண் 24 ஆகும். அதனை இரண்டாக பிரித்து 1557, 1558 என்று வழங்கப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல்: பட்டா மாறுதல் உத்தரவில் பட்டா மாறுதலுக்கு முன்பும், பட்டா மாறுதலுக்கு பின்பும் தரப்பட்டவற்றில் அழகம்மாள் பெயரே உள்ளது. அதாவது இறந்தவர் பெயருக்கே மறுபடியும் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது, விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. விவசாயிகளை அவமதிக்கும் செயலாக இதைப் பார்க்கிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் இந்த சம்பவம் அதிர்ச்சியை தந்து வருகிறது.. 3 வருடத்திற்கு முன்பு இறந்தவருக்கு எப்படி வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்க முடியும் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.. பட்டா விவகாரத்தில் இப்படி அஜாக்கிரதை சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தாலும், பல்வேறு இடங்களில் பட்டாக்கள் முறையாகவே வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல்: இன்றுகூட, திண்டுக்கல் மாவட்டம் தெப்பம்பட்டியில் பட்டியலின மக்களுக்கு பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதாவது, தெப்பம்பட்டியில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது..
தெப்பம்பட்டி: அப்போது நீதிபதி இதுகுறித்த உத்தரவில், "காலனித்துவ அதிகாரத்துக்கும் குடியரசு ஆட்சிக்கும் வேறுபாடுகள் உள்ளன. அரசு அலுவலர்கள் இந்த விவகாரத்தை முழுமையான நோக்கத்துடன் பார்த்து செயல்பட வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் இருக்கிறார்கள், ஆனால் பொதுத்துறையில் சேவை இல்லை.. எனவே, தெப்பம்பட்டி கிராமத்தில் 500 குடும்பத்தினருக்கு 3 மாதங்களில் இலவச வீட்டு பட்டா வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, இந்த வழக்கையும் முடித்துவைத்தார் நீதிபதி.
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications