Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதித்த தூத்துக்குடி துறைமுகம்.. பாராட்டிய பிரதமர் மோடி! பசுமை இந்தியா திட்டத்தில் புதிய மைல்கல்!ஆஹா

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பசுமை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதாக தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் வெப்பமயமாதல் செயல்பாடுகளை குறைப்பதற்காக பசுமை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி இருக்கையில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த காற்று மாசு மற்றும் வெப்பநிலை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவும் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்பதால் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இந்தியா இருக்கிறது.

PM Narendra Modi appreciated that the Tuticorin port of Green India project has done well

இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பசுமை இந்தியா திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அழிந்து வரும் காடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே பிரதான நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் மரக்கன்றுகள் நடப்படும். இவை அடுத்த ஆண்டு மீண்டும் கணக்கெடுக்கப்படும். நட்டு வைக்கப்பட்ட மரங்களில் எத்தனை மரங்கள் வளர்ந்துள்ளன? எத்தனை மரங்கள் அழிந்தள்ளன என்பதை கணக்கெடுத்து பார்த்து மீண்டும் மரக்கன்றுகள் நடப்படும்.

அப்படியாக கடந்த 2022ம் ஆண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேற்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மரங்கள் குறித்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான மற்றும் தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்க தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு நல்வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார். இந்த ட்வீட் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

PM Narendra Modi appreciated that the Tuticorin port of Green India project has done well

சமநிலை ஏன் முக்கியம்?: வெறும் 29% மட்டும் நிலப்பரப்பு கொண்டிருக்கும் இந்த பூமியில் மனிதர்கள் உருவாக்கிய தொழிற்சாலைகள் அதீத வெப்பத்தை உமிழந்து வருகிறது. இதன் காரணமாக துருவ முனைகளில் உள்ள பனிப்பாறைகள் கரைய தொடங்கியுள்ளன. மேலே குறிப்பிட்டதைப் போல பூமியில் நிலப்பரப்பு என்பது வெறும் 21%தான். ஆனால் நீர் 79% இருக்கிறது. மேலும் பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர்மட்டம் உயர்ந்து குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். மட்டுமல்லாது சென்னை போன்ற கடரோல நகரங்கள் முற்றிலுமாக நீரில் மூழக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் மனித இனத்திற்கே ஆபத்து ஏற்படலாம்.

PM Narendra Modi appreciated that the Tuticorin port of Green India project has done well

மறுபுறம் வெப்பநிலை அதிகாரிப்பால் கடல்நீரின் வெப்பநிலையும் உயர்ந்து எல் நினோ போன்ற ஆபத்துகளும் ஏற்படலாம். இதனால் பூமியின் ஒரு பக்கத்தில் கடுமையான வெப்பமும் மறு பக்கத்தில் கடுமையான வெள்ளமும் ஏற்படும். இப்படியான வானிலை நம்மாள் முன்கூட்டியே கணிக்க முடியாது. மற்றொரு ஆபத்து காற்று மாசு. தொழிசாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை கடுமையான காற்று மாசை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க மரம் வளர்ப்பது, காடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்றவை முக்கியமானவையாகும். எனவேதான் மத்திய அரசு காடு வளர்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+