திருச்செந்தூர் கோயிலுக்குள்.. “விஜய்க்கு அரோகரா” போட்ட இளைஞர்களுக்கு சிக்கல்! அறநிலையத்துறை அதிரடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்த விஜய் ரசிகர் ஒருவர், கந்தனுக்கு அரோகரா, விஜய்க்கு அரோகரா என முழக்கமிட்டதோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ டிரெண்ட் ஆன நிலையில் அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செந்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. சூரனை வதம் செய்த திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அதிலும் முக்கியமான விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

police-complaint-filed-against-youth-for-raising-arogara-for-vijay-slogan-inside-tiruchendur-templ

திருச்செந்தூர் கோயிலில் விஜய் ரசிகர்கள்

திருப்பதியை மிஞ்சும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. முக்கியமான நாட்களில் 6 மணி நேரம், 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு கூட்டம் தற்போது அலைமோதுகிறது. திருச்செந்தூர் கோயில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதற்கும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள், தரிசனம் செய்ய பக்தர்கள் லைனில் காத்திருக்கும் போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் புகைப்படத்தை காண்பித்தும் "வீரவேல் முருகனுக்கு, தளபதி விஜய்க்கு, தமிழக வெற்றி கழகத்திற்கு அரோகரா" என்ற கோஷமிட்டு இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

மேலும், சில பக்தர்களிடம் நீங்கள் அக்கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும் எனவும், அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத்துறையை நம்ம கையில் எடுக்கிறோம் என ஒருவர் கூறி ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது. தவெக தொண்டர்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடும் இடங்களில் எல்லாம் தவெக கொடியை காட்டி வாக்கு சேகரிக்கும் நிலையில், தற்போது கோயிலுக்குள் சென்று விஜய்க்கு அரோகரா என கோஷம் போட்டது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற புனித தலத்தின் ஆன்மீக சூழல், வழிபாட்டு ஒழுங்கு மற்றும் பொது அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட செயல் ஆகும்.

கடும் நடவடிக்கை வேண்டும்

இந்த செயல் பொதுமக்களிடையே குழப்பம், பதற்றம் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. எனவே, மேற்படி செயல் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால், காணொளியை பதிவிட்ட நபர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, வீடியோவை சமூக வலைதளத்திலிருந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறாத வகையில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+