தூத்துக்குடியில் வரலாறு காணாத பெருமழை.. காயல்பட்டினத்தில் 76 செமீ.. திருச்செந்தூரில் 63 செமீ பதிவு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இதுவரை காயல்பட்டினத்தில் 76 செமீ மழை பெய்துள்ளது. இதேபோல் திருச்செந்தூரில் 63 செமீ மழை பெய்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. முதலில் மெதுவாக பெய்த மழை நேரம் போகப் போக பிக் அப் ஆனது. அதிகாலையில் பலத்த மழையாக மாறியது. நேற்று அதிகாலை முதலே 4 மாவட்டங்களிலும் தொடர் மழையாக மாறி வெளுத்து வாங்கி யது.

rain-havoc-in-tuticorin-district-more-than-60-cm-pour-in-tiruchendur-srivaikuntam-area

நெல்லையில் பகல் 12 மணி அளவில் இருந்து கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை, அதனுடன் இணைந்த சேர்வ லாறு அணை பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்தது. மழை காரணமாக மணிமுத்தாறு அருவி இருக்கும் பகுதி தெரியாத அளவுக்கு வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது.

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. இந்த நீர் ஆற்றங்கரை யோர கிராமப்பகுதிகளிலும் புகுந்துள்ளது. இதனால் ஆற்றின் அருகே யாரும் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மக்க ளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக வானம் பார்த்த பூமிகளாக காணப்படும் உடன்குடி சுற்று வட்டார பகுதிகளிலும் வரலாறு காணத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 76 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 63 செ.மீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 57 செ.மீ. கோவில் பட்டி 35 செ.மீட்டர் மழையும் தற்போது வரை பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+