இட்லி மாவு அரைக்க ரேஷன் அரிசி.. இனி இதை செய்தாலே, குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும்.. அரசு அதிரடி
தூத்துக்குடி: தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து தந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரேஷன் பொருட்கள் சீராக கிடைக்கவும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில், ரேஷன்தாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப்பொருட்கள் மாதமாதம் வழங்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, குடும்ப அட்டைதாரர்களின் நடைமுறை சிக்கல்களை தீர்த்து, அவர்களின் குறைகளையும் போக்கி வருகிறது. எனினும், ரேஷன் அரிசி கடத்தல்களை மட்டும் இன்னமும் ஒழிக்க முடியாமல் உள்ளது.

ரேஷன் அரிசியை, கேரளம், ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்துவது தொடர்ந்தவாறே இருக்கிறது.. தமிழக எல்லைகளில் இதற்கென்றே இருக்கும் புரோக்கர்கள், ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று விடுவதாக தெரிகிறது. இதுபோன்ற புரோக்கர்களால், அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி, பருப்பு முறையாக கிடைக்காமல் போய்விடுகிறது.
மூட்டை மூட்டையாக அரிசி: அதனால்தான், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காகவே, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வேட்டையை கையில் எடுத்துள்ளனர்.. சமீபத்தில்கூட, திருவிடைமருதுார் போலீஸார், ஒரு குடோனுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து, ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனர்.
ஆவணியாபுரம், மதினா தெருவைச் சேர்ந்த முகமது பைசல் (23) என்பவர், சொந்தமாக இந்த பகுதியில் மில் வைத்திருக்கிறார்.. இங்கு, இட்லி மாவு மொத்தமாக அரைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.. அதாவது, ரேஷன் அரிசியை மொத்தமாக பிளாக்கில் வாங்கி விற்று காசாக்கி, அதில், இட்லி மாவு அரவை மில் ஒன்றை சொந்தமாக தொடங்கி நடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.
தூத்துக்குடி: இப்போது தூத்துக்குடியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கார்டு வைத்துள்ள பொதுமக்களிடம் இருந்து, ரேஷன் அரிசியை வாங்கி, அவற்றை கேரளாவுக்கு கடத்தும் செயல் அதிகரித்தபடியே உள்ளது.. இன்னும் சிலர் ரேஷன் அரிசியாக கடத்துவதற்கு பதில், அதனை அரிசி ஆலைகளுக்கு அனுப்பி பாலிஷ் செய்து, அந்தந்த அரிசி ஆலைகளின் பெயரிலேயே உயர்தர அரிசியாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்களாம்.
மேலும் சிலர், ரேஷன் அரிசியை மாவாக அரைத்து, அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளாக பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக விற்பனை செய்து வருகின்றனர். பிரபல நிறுவனங்களின் பெயரிலேயே இட்லி மாவு பாக்கெட் விற்கப்படுவதால், யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் இருந்துள்ளது.
அரிசி மூட்டைகள்: கடந்த வாரம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட இனாம் மணியாச்சி ஊராட்சி அத்தைகொண்டான் பகுதியில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கோவில்பட்டி தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று விரைந்து சோதனை மேற்கொண்டார்கள்.
அப்போது தலா 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டை ரேஷன் அரிசி மாவும், தலா 50 கிலோ எடை கொண்ட 3 மூட்டை ரேஷன் அரிசியும் அங்கு இருப்பதை கண்டு அதிர்ந்த போலீசார், அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இவற்றை பதுக்கி வைத்து இருந்த அத்தைகொண்டானை சேர்ந்த ராமமூர்த்தி (52), முருகன் (46) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அட்டை பறிமுதல்: எனினும், மீண்டும் இதுபோன்றே புகார்கள் தொடர்ந்து போலீஸாருக்கு வந்தது.. இதையடுத்துதான், ரேஷன் அரிசியை விற்பனை செய்பவர்களின் குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும் என்று தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, எஸ்பி சொல்லும்போது, "ரேஷன் கடைகளில் இருந்து பொதுமக்கள் ரேஷன் அரிசியை வாங்கி, அதைவீட்டில் பதுக்கி வைத்து, ரேஷன் அரிசியை கடத்தும் நபர்களுக்கு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
கடும் எச்சரிக்கை: எனவே, ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து, கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களது குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.. போலீஸாரின் இந்த உத்தரவையடுத்து, ரேஷன் அரிசி கடத்தல், ஓரளவு கட்டுக்குள் வரும் என்று நம்பப்படுகிறது.
கடந்த வாரம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில், "தமிழகத்தில் ரூ.1,900 கோடி மதிப்புள்ள 5.2 லட்சம் டன் அரிசி கடத்திச் செல்லப்படுவதை மன்னிக்கவே முடியாது. ஆனால், வெறும் ரூ.2.4 கோடி மதிப்புள்ள 42,500 டன் கடத்தல் அரிசியை மட்டும் தான் தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடத்தல் தொடர்பாக ஒரு சில நியாயவிலைக்கடை ஊழியர்கள் தவிர வேறு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைக்கு வருவோரிடம் மளிகை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என்றும், அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஊழியர்கள் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, கடைகளில் நோட்டீஸ் ஒட்டுமாறும், மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ரேஷன் பொருட்கள், அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் கிடைக்கும் வகையில், தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவது, மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்க செய்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications