தென் மாவட்டங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்? லாரி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..என்ன காரணம்
தூத்துக்குடி: சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற போராட்டமாக மாறும் என துத்துக்குடியில் உள்ள பாரத் கேஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் லாரி ஓட்டுநர்கள் எச்சரித்து இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் தடை படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பாரத் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு வரும் கேஸ் சிலிண்டர்கள் அங்கிருந்து லாரிகள் மூலமாக ஏற்றப்பட்டு தென் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். கேஸ் ஏஜென்சிகளுக்கு கொண்டு செல்லப்படும் இந்த சிலிண்டர்கள் அங்கிருந்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், துத்துக்குடியில் உள்ள பாரத் கேஸ் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டுநர்களாக செயல்படும் டிரைவர்கள் இரவு திடீரென போராட்டத்தில் குதித்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இந்த லாரி ஓட்டுநர்களுக்கு 150 கி.மீட்டருக்கு ரூ. 500 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதற்கிடையில், தங்களுக்கு மாத ஊதியம் தனியாக வழங்க வேண்டும் என்று 12 ஆம் தேதி போரட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று வட்டாட்சியர் முன்னிலையில் ஊதிய விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வெளியில் இருந்து ஓட்டுநர்களை வரவழைத்து லாரிகளை இயக்கியதால் அந்த லாரிகளையும் மறித்து ஓட்டுநர்கள் போராட்டம் செய்தனர்.

பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற போரட்டமாக மாறும் என ஓட்டுநர்கள் எச்சரித்து இருப்பதால் 7 மாவட்டங்களுக்கு எரிவாயு விநியோகம் தடை படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. போராட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கணேஷ் என்ற லாரி ஓட்டுநர் கூறியதாவது:-
தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. லோடு ஏற்றுவதற்காக சிலரை வலுக்கட்டாயமாக அழைத்துள்ளனர். இது தொடபாக யூனியனில் பேசியிருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டும் வரை எந்த ஒரு லாரியையும் உள்ளே விடாமல் நிறுத்த போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications