தூத்துக்குடி அருகே ஆற்றின் நடுவே டெட்டனேட்டர் மூலம் தகர்க்கப்படும் பாறைகள்.. மர்மத்தின் பின்னணி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கருமேனி ஆற்றில் பயங்கர வெடி பொருட்கள் உடன் டெட்டனேட்டர்கள் வைத்து வெடிவைத்து ஆற்றின் நடுவே உள்ள பாறைகள் தகர்க்கப்படுவதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற போது அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான டெட்டனேட்டர் வெடிபொருட்கள் வைத்து ஆற்றின் நடுவே உள்ள பாறைகள் தகர்க்கப்பட்டது. பாறைகளை வெடிவைத்து தகர்க்கடுக்கப்படுவதால் அப்பகுதியில் வீடுகள் குலுங்கின.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அடுத்தடுத்து இரு தினங்களும் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அப்பகுதியில் தகவல் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீதி அடைந்து தங்களை வீடுகளை வெற்றி வெளியே வந்து எட்டிப் பார்த்தனர். அப்போது லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.

இந்த நிலையில் சாத்தான்குளத்தில் உள்ள கருமேனி ஆற்றில் பயங்கர வெடி பொருட்கள் உடன் டெட்டனேட்டர்கள் வைத்து வெடிவைத்து ஆற்றின் நடுவே உள்ள பாறைகள் தகர்க்கப்படுவதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற போது அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான டெட்டனேட்டர் வெடிபொருட்கள் வைத்து ஆற்றின் நடுவே உள்ள பாறைகள் தகர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அப்பகுதியில் பாறைகளுக்கு இடையே துளையிட்டு அதில் வெடிபொருட்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பணி எதற்காக நடக்கிறது? அரசு பணியா? அல்லது தனியார் பணியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து இதுவரை சரியான தகவல் இல்லை. மேலும் ஆற்றின் நடுவே குழி தோண்டி பூமிக்கு அடியில் உள்ள பாறைகளை வெடிவைத்து தகர்க்கடுக்கப்படும் சம்பவம் நடந்ததாலேயே அப்பகுதி முழுவதும் வீடுகள் குலுங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்படும் போது நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் நில அதிர்வு ஏற்படும் போது அந்த அதிர்வு கேமராவில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications